சென்னை 28 படம் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பெரும்பான்மையான படங்கள் ஹிட்டாகியுள்ளன. சமீபத்தில் சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு படம் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்தது. மேலும் இந்தப் படம் சிம்புவுக்கு கம்பேக் படமாகவும் அமைந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு நாக சைதன்யாவை இயக்குவதற்கு கமிட்டாகியிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படமானது நாக சைதன்யாவுக்கு முதல் நேரடி தமிழ் படமாகும்.



கதை வேலையில் இவ்வளவு நாள் பிஸியாக இருந்த வெங்கட் பிரபு தற்போது அந்த வேலையை முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. கதை வேலை முழுமையாக முடிந்துவிட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 23ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆனால், படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னதாகவே பாடல்களை வாங்கிவிடும் வழக்கம் கொண்ட வெங்கட் பிரபு இந்தப் படத்துக்கும் அதே நடைமுறையை பின்பற்ற தொடங்கியிருக்கிறார்.



இதற்கிடையே, எப்போதும் வெங்கட் பிரபு படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜாதான் இந்தப் படத்துக்கும் இசையமைப்பார் என அனைவராலும் கருதப்பட்டது.


ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக யுவனுடன் சேர்ந்து இளையராஜாவும் இப்படத்துக்கு இசையமைக்க இருக்கிறார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | திருப்பதிக்கு அடுத்து நயன்தாரா- விக்னேஷ் சிவன் சென்ற இடம் எங்கேனு தெரியுமா?!


இதுவரை வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் படங்களில் மன்மத லீலை, பார்ட்டி ஆகிய படங்களைத் தவிர்த்து யுவன் சங்கர் ராஜாவே இசையமைத்திருக்கிறார். தற்போது முதல்முதலாக வெங்கட் பிரபு படத்தில் இளையராஜாவும், யுவனும் இசையமைப்பர் என வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதற்கு முன்னதாக இளையராஜாவும், யுவனும், சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள மாமனிதன் படத்துக்கு இணைந்து இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | விஜய்காக கதை ரெடியாக வைத்திருக்கும் தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குநர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR