நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் சிவன் திருமணம் கடந்த 9ஆம் தேதி நடந்தது. மாமல்லபுரத்தில் தடபுடலாக நடந்த அந்தத் திருமணத்தில் திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இணையம் முழுக்கவே கடந்த சில நாட்களாக இவர்களின் திருமணம்தான் பேசுபொருளாக இருந்தது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் திருப்பதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். திருமணத்தையே திருப்பதியில் வைக்கத்தான் முதலில் திட்டமிட்டனராம்.
ஆனால் திருப்பதியில் நடத்தினால் அதிகமான நபர்கள் அதில் கலந்துகொள்ளமுடியாது எனக் கருதி, மாமல்லபுரத்துக்கு மாற்றப்பட்டதாம். திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற நிலையில் அங்கே சர்ச்சை ஒன்று வெடித்தது. அதாவது நட்சத்திர ஜோடி மற்றும் சில புகைப்படக் கலைஞர்கள் காலணி அணிந்துவந்திருந்த விவகாரம் சர்ச்சையானது.
இதையடுத்து விக்னேஷ் சிவன் இது தொடர்பாக மன்னிப்பு கோரினார். இதையடுத்து கடந்த 11ஆம் தேதி இருவரும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். எந்த ஹோட்டலில் இருவரும் முதன்முதலாகச் சந்தித்துக்கொண்டனரோ அதே ஹோட்டலில்தான் செய்தியாளர்கள் சந்திப்பும் நடத்தப்பட்டது.
மேலும் படிக்க | மாஸ் காட்டும் கமல்ஹாசன்..! விஜய்யின் ‘வசூல்’ இடம் பறிபோகிறதா? ஓர் அலசல்!
இந்நிலையில் புதுமணத் தம்பதி நயன்தாராவின் சொந்த ஊரான கேரளாவுக்கு விசிட் அடித்துள்ளது. கேரளாவில் உள்ள கொச்சிக்கு இருவரும் சென்றுள்ளனர். வைலட் நிற டாப், ஆரஞ்சு நிற ஷால் அணிந்து நயன்தாரா காட்சியளித்தார். ட்ரெண்டிங் உள்ள Balmain டி-சர்ட்டை விக்னேஷ் சிவன் அணிந்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க | Troll செய்யப்படும் இயக்குநர் நெல்சன்: லோகேஷ் கனகராஜ் சொல்வது என்ன?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR