புதுடெல்லி: தமிழ் திரையிசையின் அடையாளத்தை மாற்றிய இசைஞானி இளையராஜாவின் அடுத்தக் கட்ட பயணம் இன்று தொடங்கியது. மாநிலங்களவை உறுப்பினராக தனது நியமிக்கப்பட்ட இளையராஜா, இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டார்.  மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றார் இளையராஜா... குடியரசுத் தலைவர் பதவியேற்றுக் கொண்ட நாளில், இசை அரசரும் பதவியேற்றார். சாதாரண பின்னணியில் இருந்து வந்த இளையராஜா பல சாதனைகளை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நிலையில், இன்று மாநிலங்களவையில் தமிழில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனித உணர்வுகளை இசையின் வாயிலாக பிரதிபலித்தவர் இளையராஜா. அவரை மாநிலங்களவை எம்.பியாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், என்று இளையராஜாவை நியமித்தபோது பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.  தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை பி.டி.உஷா மாநிலங்களவை உறுப்பினராக சில நாட்களுக்கு முன்னரே பதவி ஏற்றுக் கொண்டார்.  


மேலும் படிக்க | இளையராஜா எம்.பி அறிவிப்புக்குப் பின் அவர் பற்றிய ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் பதிவு!


இளையராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பியாக நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. பிரதமர் மோடியை புகழ்ந்ததற்காக இளையராஜாவுக்கு இந்தப் பரிசு கிடைக்கும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது என்ற கருத்துக்களும் வெளிப்படுத்தப்பட்டன.


இளையராஜாவின் உயரம் தெரியாதவர்கள்தான் அவரை விமர்சிக்கிறார்கள் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி பதவி வழங்குவது பாரம்பரியம்.



தற்போது இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தா்மசாலா கோயில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 


மேலும் படிக்க | ‘விக்ரம்’ல ஹிட் அடிச்ச ‘சக்கு சக்கு’ ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டா?


கடந்த திங்களன்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், இளையராஜா அன்று பதவியேற்ருக் கொள்ளவில்லை.


அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இளையராஜா சென்றதால், அந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என தகவல்கள் தெரிவித்தன.  டெல்லி விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


மேலும் படிக்க |  நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு: முக்கியத் தருணங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ