இந்த மாதம் திரையரங்கில் வெளியாகும் முக்கிய படங்கள்!
டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் முக்கிய படங்களின் லிஸ்ட்!
டிசம்பர் 2021ல் OTT மற்றும் திரையரங்கில் பல படங்கள் வெளிவர உள்ளன. அதில் முக்கியமான சில படங்களின் பட்டியல்!
டிசம்பர் -9 :
வசந்தபாலன் இயக்கத்தில் G.V.பிரகாஷ் இயக்கத்தில் உருவான ஆக்ஷன் திரைப்படம் தான் 'ஜெயில்'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அபர்ணதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, பிரபாகர், ரோபோ சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீசாக இருக்கிறது. இப்படத்திற்கு G.V.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர்-10ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசானது.
டிசம்பர்-10 :
ஸ்டிவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான ஆங்கில ரொமான்டிக் படம் 'வெஸ்ட் சைட் ஸ்டோரி (WestSideStory)'. இப்படத்தில் ஆன்சல் எல்கார்ட், அரியானா டிபோஸ், டேவிட் அல்வாரெஸ், மைக் ஃபைஸ்ட், ரீட்டா மோரேனோ, ரேச்சல் ஜெக்லர் ஆகியோர் நடித்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு தற்போது டிசம்பர்-10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ALSO READ | டிசம்பர்-10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 6 புதிய படங்கள்!
டிசம்பர் -10 :
ப்ளூ சட்டை இளமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த அரசியல் திரைப்படம் தான் 'ஆன்டி இந்தியன்'. இப்படத்தில் வேலு பிரபாகரன், ராதாரவி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஆதம் பாவா தயாரிக்கிறார். இந்த திரைப்படம் டிசம்பர்-10ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.
டிசம்பர் -16 :
ஜோன் வாட்ஸ் இயக்கத்தில் உருவான ஆங்கில மார்வெல் படம் தான் "ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம் (SpiderManNoWayHome)". கற்பனை கதாபாத்திரமான ஸ்பைடர்மேன் கதைகளை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் டிசம்பர்-16ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.
டிசம்பர் -17 :
சுகுமார் இயக்கத்தில் உருவான தெலுங்கு படம் புஷ்பா(Pushpa). இப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில் ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மலையாளம், தமிழ், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட இருக்கிறது. மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர்-17ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.
டிசம்பர் -22 :
லானா வச்சோவ்ஸ்கி இயக்கத்தில் ஆங்கில மொழியில் உருவாகியுள்ள அறிவியல் தொழில்நுட்ப படம் தான் "மாட்ரிஸ் ரெஸ்சுரரெக்ஷன்ஸ்(Matrix Resurrections)". இப்படத்தில் கினு ரீவ்ஸ், கேரி-ஆன் மோஸ், ஜெசிகா ஹென்விக், ஜொனாதன் கிராஃப், நீல் பேட்ரிக் ஹாரிஸ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் டிசம்பர்-22ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.
டிசம்பர் -24 :
கபீர் கான் இயக்கத்தில் ஹிந்தி மொழியில் உருவான கிரிக்கெட் பற்றிய திரைப்படம் 83-TheFilm. தில் ரன்வீர் சிங், கிரிக்கெட் வீரர் கபில்தேவ் , தீபிகா படுகோனே , பங்கஜ் திரிபாதி , தாஹிர் ராஜ் பாசின் , ஜீவா , சாகிப் சலீம் , ஜதின் சர்னா ,சிராக் பாட்டீல் , டிங்கர் ஷர்மா, நிஷாந்த் தஹியா, ஹார்டி சந்து , சாஹில் கட்டார் , அம்மி விர்க் , ஆதிநாத் கோத்தாரே , தைர்யா கர்வா மற்றும் ஆர் பத்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் டிசம்பர்-24ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.
டிசம்பர் -24 :
பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள படம் "ரைட்டர் (Writer)". இப்படத்தை ரஞ்சித் தயாரிக்க, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர்-24ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.
டிசம்பர் -24 :
ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்கு படம் "ஷியாம் சிங்க ராய்(ShyamSinghaRoy)". இப்படத்தில் நானி, சாய் பல்லவி , கிருத்தி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் டிசம்பர்-24ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.
டிசம்பர் -24 :
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் தமிழ் மொழியில் உருவான ஆக்ஷன் படம் "குருதி ஆட்டம்(Kuruthiaattam)". இப்படத்தில் அதர்வா, பிரியா பவானி ஷங்கர், ராதா ரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு கோவிட் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து தற்போது இந்த திரைப்படம் டிசம்பர்-24ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.
டிசம்பர் -31 :
கௌதம் தின்னனுரி இயக்கத்தில் ஹிந்தி மொழியில் உருவாகியுள்ள விளையாட்டு பற்றிய திரைப்படம் "ஜெர்சி (Jersey)". ஷாஹித் கபூர், மிருனால் தாக்கூர், பங்கஜ் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் டிசம்பர்-31ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.
டிசம்பர் -31 :
கிரண்ராஜ் இயக்கத்தில் கன்னட மொழியில் உருவாகியுள்ள நகைச்சுவை படம் "777சார்லி (777Charlie)". இப்படத்தை பரம்வா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா, சிருங்கேரி, ராஜ் பி. ஷெட்டி, டேனிஷ் சைட், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் டிசம்பர் -31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.
ALSO READ | Blue சட்டை : என்னய்யா பண்ணி வெச்சிருக்க? Anti-Indian Review
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR