வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை: தொடரும் திரைத்துறை ரெய்டுகள்
IT Raids in KollyWood: கோலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்களான சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன்,அன்புச்செழியன், கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை மும்முரம்
சென்னை: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக, அன்புச்செழியன், கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை தொடங்கி, அவை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களை உருவாக்க, தயாரிப்பாளர்களுக்கு கடன் கொடுக்கும் ஃபைனான்சியர் அன்புசெழியன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். சென்னையில் 10 இடங்களிலும் மதுரையில் 30 இடங்களிலும் அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 13 கோடி ரூபாய் அளவிலான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளன.
சென்னையில் உள்ள அன்புச்செழியனின் சகோதரர் அழகர்சாமி வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். சென்னையில் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அன்புச்செழியன் சகோதரர் அழகர்சாமியின் வீடு பூட்டப்பட்டிருந்தது. ஊழியர்களிடம் சாவி இல்லை என்று கூறிய நிலையில் காலை 7 மணியிலிருந்து 4 மணி நேரத்திருக்கும் மேல் காத்திருந்த க்கும் நிலை ஏற்பட்டதால் அங்கு காத்திருந்த அதிகாரிகள் பொறுமையிழந்தனர்.
கோபமடைந்த அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவை பெற்று பூட்டை உடைத்து வீட்டை திறந்து சோதனையிடும் நிலை ஏற்படலாம் என்று எச்சரித்ததையடுத்து யாரிடமோ போனில் பேசிய ஊழியர்கள் சிறிது நேரத்தில் வீட்டின் சாவியைக் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
மேலும் படிக்க | நாளை விடுப்பு எடுக்கக் கூடாது - ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை
வீட்டின் உட்புற கதவுகளுக்கு பூட்டு இல்லை. அதற்கு பதில் நவீன லேசர் டெக்னாலஜி உதவியுடனான லாக் அமைக்கப்பட்டிருந்தது. முகம் கண் விழி அல்லது கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே திறக்கப்படும் வகையில் கதவு அமைக்கப்பட்டிருந்ததால் அதற்கு மேல் என்ன செய்வது என அதிகாரிகளுக்கு தெரியவில்லை. பூட்டிய கதவு முன் அமர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாருடைய கண்விழி, கைரேகை பொருந்தும் என அறிந்து அவர்களை அழைத்து வந்து கதவி திறப்பதற்காக அதிகாரிகள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஆண்டவன் கட்டளை, மருது மற்றும் வெள்ளைக்கார துரை உள்ளிட்ட சில படங்களை தயாரித்து உள்ள அன்புச்செழியன், மதுரை பகுதியிலும் பெரிய அளவில் பைனான்ஸ் செய்து வந்தார். அப்போது, அவர் அதிமுக கட்சியிலும் இணைந்து செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மேலமாசி வீதியில் உள்ள அன்புச்செழியனுக்கு சொந்தமான அலுவலகம், வீடு, செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கம் என மதுரையில் அன்புச்செழியன் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
கடந்த 2020ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள், பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் சினிமா நிறுவனம், நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடத்தியதும் நினைவுகூரத்தக்கது. அப்போது அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டு, 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க | பார்த்திபனின் இரவின் நிழல் படம் எப்படி இருக்கு
அப்போது, கோலிவுட் திரைப்படத் துறையினரின் இடங்களில் நடைபெற்ற சோதனைகளில், கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டது. பல திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளது மற்றும் திரைத்துறையில் கருப்பு பண முதலீடு அதிகமாக இருப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்ட வருமான வரித்துறை, அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்புச்செழியனைத் தொடர்ந்து, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கலைப்புலி தாணு அலுவலகத்திலும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.தியாகராய நகரின் பிரகாசம் சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில், காலை 9 மணி முதல் 12 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
மேலும் படிக்க | முக ஸ்டாலின் நேற்றைய அரசியல் வரலாறு 2092: முதல்வரை பாராட்டும் பார்த்திபன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ