படத்தின் ஒன் லென்: ஒரு சிறுவன் அனாதையாக இருந்தால் இந்த சமுகத்தில் அவனுக்கு நடக்கும் இன்னல்கள் மற்றும் இடையூறுகளை முன்னும் பின்னுமாக காட்சிபடுத்திருக்கிறார் பார்த்திபன், இதுவே இரவின் நிழல் படத்தின் ஒன் லென்.
இரவின் நிழல் படத்தை மொத்தமாக 96 நிமிடங்கள் எடுத்துள்ளார் பார்த்திபன். 96 நிமிடங்கள் படத்தை ஒரே டேக்கில் உருவாக்கியுள்ளார். படத்தில் முதலில் 30 நிமிடம் படம் உருவான கதை ஒரு சிறு தொகுப்பாக காட்சிப்படுத்தபடுகிறது. படத்தை உருவாக்க பட்ட கஷ்டம் மற்றும் படம் எப்படி உருவானது என அனைத்தையும் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியுள்ளார். அதை பார்த்து படம் பார்ப்பவர்களுக்கு படம் எப்படி உருவாகியுள்ளது என்ற ஒரு நல்ல தெளிவு கிடைக்கிறது. திரைக்கதை, வசனம், பாடல், எடிட்டிங் என இந்த முறை, அனைத்தையும் பார்த்திபன் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், ப்ரியங்கா ரூத், ப்ரிகிடா சகா, ஆனந்த்கிருஷ்ணன் என பெரிய நடிகர் பட்டாளத்தை வைத்து கொண்டு மிகவும் அற்புத படைப்பாக கொடுத்து இருக்கிறார்.
மேலும் படிக்க | Tamil Movies - இந்த வாரம் திரையரங்கில் வெளியாகும் 5 படங்கள்!
இரவின் நிழல் படத்திற்க்கு ஏ.ஆர்.ரகுமான் இசை கூடுதல் பலத்தையும், பெருமையும் ஏற்படுத்தி இருக்கிறது. படத்தில் கேமிரா நகர்ந்து கொண்டே இருக்கும், அதே போல ரகுமானின் இசையும் அதற்கு ஏற்ப அமைத்து இருப்பது படத்தின் கூடுதல் அழகு. பாடல்களையும் அதற்கு நடனம் என அதே சிங்கிள் டேக்கில் காட்சிபடுத்திருக்கிறார் பார்த்திபன். பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் இரவின் நிழல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு இவரது உழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.
முழுப்படத்தையும் சிங்கிள் டேக்கில் அவர் கேமிராவுடன் செல்ல வேண்டும் ,ஏதேனும் சிறு பிழை ஏற்ப்பட்டால் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இதனை மிகவும் துல்லியமாக காட்சிபடுத்தி உள்ளார். இரவின் நிழல் எனும் இப்படியொரு கலைப் படைப்பை நம் கண் முன்னே காட்சிப்படுத்தியது ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் தான். இவரை சரியான முறையில் வழி நடத்தி இருக்கிறார் இயக்குநர் பார்த்திபன். ஒரே டேக்கில் படத்தை எடுக்க அவருக்கு 23 டேக் தேவைபட்டுள்ளது. ஒரு சிறிய தவறு நடந்தால் கூட மீண்டும் முதல் டேக்கில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற சவாலை சாதித்து காட்டியுள்ளார்.
படத்தில் விமர்சனங்கள் நிறைய இருக்கலாம், ஆனால் இது போன்ற படங்களை தமிழ் சினிமா கொண்டாடி ஆக வேண்டும். அந்த ஒரு 96 நிமிட சிங்கிள் ஷாட்டுக்காக 23 முறை 96 நிமிடங்கள் நடித்து இயக்கி இருக்கிறார்கள். அவர் மட்டுமில்லை, படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற முயற்சி எடுத்து படத்தை வெற்றிக்காக எடுத்து சென்றுள்ளனர். பார்த்திபனின் இரவின் நிழல் படம் எல்லா ஆடியன்ஸையும் சென்றடையுமா என்றால் சந்தேகம் தான். இரவின் நிழல் படத்தை உலக சாதனைக்காக உருவாக்கியுள்ளார். படம் மிகப்பெரிய வெற்றி பெரும் என்பது படம் பார்த்தவர்களின் எண்ணமாக இருந்தது. தமிழ் சினிமாவில் இது போன்ற படங்களை வரவேற்க்க வேண்டும். இது போன்ற சினிமாவினால் தமிழ் சினிமா அடுத்த கட்ட இடத்திற்க்கு நகரும்.
மேலும் படிக்க | சாய்பல்லவி நடித்த கார்கி படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR