Indian 2 Movie Trailer : 1996ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிநடை போட்ட இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் பல ஆண்டுகளாக உருவாகி வந்தது. ஒரு வழியாக இப்படத்தின் பணிகள் முடிந்து, டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியன் 2 : 


இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சி கதையாக உருவாகியிருக்கிறது இந்தியன் திரைப்படம். முதல் பாகத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த கமல்ஹாசன், இந்த படத்தில் ஒரே வேடத்தில் நடித்திருக்கிறார். ரசிகர்களால் “இந்தியன் தாத்தா” என்று அழைக்கப்படும் “சேனாபதி” கதாப்பாத்திரம்தான் அது. 


டிரைலர் ரிலீஸ்:


இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று காலை நடைப்பெற்றது. இதில் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இன்று 7 மணிக்கு டிரைலர் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது போலவே, டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது.



டிரைலர் எப்படி? 


இந்தியன் 2 படத்தின் டீசர், சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால், அப்போது அதற்கு ரசிகர்கள் மத்தியில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தியன் 2 படத்தின் டிரைலருக்கும் இதே நிலை தானோ என படக்குழுவினர் பயத்தில் இருந்தனர். ஆனால், ஒரு வழியாக டிரைலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூக்கி சாப்பிடும் அளவிற்கு டிரைலர் நன்றாகவே வந்திருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் விதவிதமான கெட்-அப்பில் சண்டை காட்சிகளில் வந்து அசத்தியிருக்கிறார். 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் ஊழலுக்கு எதிராக வன்முறையில் இறங்கிய சேனாபதி, இந்த படத்தில் சக மனிதராக எல்லோரையும் போல இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


சித்தார்த் அவரிடம், “சின்ன வயசுல இருந்து நீங்க தான பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லி வளத்தீங்க..இப்போ நீங்களே இப்படி இருந்தாதான் வாழ முடியும்னு சொல்றீங்க..” என்று கேள்வி கேட்கும் டைலாக் இடம் பெற்றிருக்கிறது. மேலும், “இது இரண்டாவது சுதந்திர போராட்டம். காந்தியாரின் வழியில் நீங்கள்..நேதாஜி வழியில் நான்” என்று கமல் பேசும் டைலாக்கும் இடம் பெற்றிருக்கிறது. இது போன்ற பல டைலாக்குள் படத்தில் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கமல்ஹாசன், சினிமாவிற்காக என்றால் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் உழைப்பை போடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த படத்தை எடுக்கும் போது இவருக்கு வயதாகி விட்டது. இருப்பினும் 3 மணி நேரம் மேக்-அப் போட்டு, அந்தரத்தில் 4 நாட்கள் தொங்கியெல்லாம் இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார்.


மேலும் படிக்க | Indian 2: “இப்படி பண்ணிட்டீங்களே அனிருத்” இந்தியன் 2 பாடல்களுக்கு ரசிகர்களின் விமர்சனம்!


நடித்திருப்பவர்கள் யார் யார்? 


இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரகனி, ஜாக்கி ஷ்ராஃப், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அது மட்டுமன்றி, தமிழ் திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களும் மறைந்த பிரபலங்களுமான விவேக், மயில்சாமி, நெடுமுடி வேணு, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இவர்களின் காட்சிகளும் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கிராஃபிக்ஸ் உபயோகிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


வெவ்வேறு கெட்-அப்பில் கமல்..


நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் வெவ்வேறு கெட்-அப்பில் தோன்றியிருக்கிறார். இதனால், இப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு பலருக்கும் பன்மடங்காக எகிறியிருக்கிறது. படம், அடுத்த மாதம் (ஜூலை) 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 


மேலும் படிக்க | Indian 2: இந்தியன் 2 டிரைலர் வெளியீட்டு விழா! கமல் குறித்து ஷங்கர் பகிர்ந்த விஷயம்-என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ