Indian 2: இந்தியன் 2 டிரைலர் வெளியீட்டு விழா! கமல் குறித்து ஷங்கர் பகிர்ந்த விஷயம்-என்ன தெரியுமா?

Indian 2 Trailer Launch Event : இந்தியன் 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் யார்  யார் என்னென்ன பேசினார்கள் என்பது குறித்து இங்கு பார்ப்போம்!

Indian 2 Trailer Launch Event : ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படங்களுள் ஒன்று, இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடப்பெற்று வருகிறது. முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த கமல் ஹாசனே, இதிலும் ஹீரோவாக நடிக்கிறார். இந்தியன் தாத்தா வேடத்தில் வெளியான இவரது மிரட்டல் லுக்கை பார்த்து பலர் வியந்து போயினர். 

1 /8

1996ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம், இந்தியன். இந்த படத்தில் கமல், தந்தை-மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் பல வருடங்களுக்கு முன்பிருந்தே உருவாகி வருகிறது. ஒரு சில காரணங்களினால் இதன் ரிலீஸ் மட்டும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. 

2 /8

இந்தியன் 2 படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருக்கிறது. பத்திரிக்கையாளர்களை அழைத்து டிரைலர் வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இதில் நடிகர்கள் சித்தார்த், கமல் ஹாசன், இயக்குநர் ஷங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

3 /8

இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசிய ஷங்கர், கமல்ஹாசன் இப்படத்திற்காக போட்ட கடின உழைப்பு பற்றியும் பேசினார். அப்போது, ஒரு காட்சிக்காக அந்தரத்தில் தொங்கியபடி 4 நாட்கள் நடித்ததாகவும் மேக்-அப் போட, 3 மணி நேரம் அப்படியே அமர்ந்ததாகவும் கூறியிருக்கிறார். 

4 /8

கமல்ஹாசன், இந்த வருடத்தில் மட்டும் 3 வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார். கல்கி 2898 ஏடி படத்தில் வில்லனாகவ் ஏலியன் கதாப்பாத்திரத்திலும், தக் லைஃப் படத்தில் ராஜா கால தோற்றத்திலும் வருகிறார். 

5 /8

இரவு 7 மணிக்கு போஸ்டர் வெளியாவதை தொடர்ந்து இதன் புதிய போஸ்டரும் வெளியாகி இருக்கிறாது. 

6 /8

இந்தியன் 2 படத்தின் படக்குழுவினர்களான காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. 

7 /8

இந்தியன் 2 படம், வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதன் ரிலீஸ் டேட் முன்னரே ஒரு முறை தள்ளிப்போயுள்ளது குறிப்பிடத்தக்கது. 

8 /8

1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். தற்போது இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.