Indian 2: “இப்படி பண்ணிட்டீங்களே அனிருத்” இந்தியன் 2 பாடல்களுக்கு ரசிகர்களின் விமர்சனம்!

Indian 2 Songs : கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம், இதோ.   

Written by - Yuvashree | Last Updated : Jun 1, 2024, 07:41 PM IST
Indian 2: “இப்படி பண்ணிட்டீங்களே அனிருத்” இந்தியன் 2 பாடல்களுக்கு ரசிகர்களின் விமர்சனம்! title=

Indian 2 Songs : கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியன் 2 படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் அடுத்த பாகம் தான் 28 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு அசம்பாவிதங்களாலும், சர்ச்சைகளாலும் சூட்டிங் நீண்டு கொண்டே போனது. இந்த நிலையில் தான், ஒரு வழியாக படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கும் தயாராக இருக்கிறது இந்தியன் 2. 

இந்தியன் 2: 

இந்த படத்திலும் கமல்ஹாசன் சேனாபதி எனும் தாத்தா கமல் பாத்திரத்திலேயே நடிக்கிறார். இதில் நடித்து வந்த நடிகர்கள் விவேக், மயில்சாமி, மனோபாலா, நெடுமுடி வேணு விட்ட போல படப்பிடிப்பின் பாதியிலேயே உயிரிழந்து விட்டனர். இதனாலும் பட வேலைகளில் தாமதம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பு இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் ஜூன் மாதத்தில் இருக்கும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த ரிலீஸ் தேதியும் தள்ளி போடப்பட்டு, ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று சமீபத்தில் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அறிவிப்பும் வெளியானது. 

இந்தியன் 2 படத்தின் இசை: 

1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். ஆனால் அதன் இரண்டாம் பாகத்திற்கு அனிருத் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். வழக்கமாக குத்து பாட்டு மற்றும் அப் பீட் மெட்டுகளை போடுவதில் நிபுணர் ஆன இவர் இந்த படத்திலும் அதையே செய்து வைத்திருக்கிறார். 

மேலும் படிக்க | லீக்கானது இந்தியன் 2 ரிலீஸ் தேதி வெளியீடு.. உற்சாகத்தில் கமல் ரசிகர்கள்

இந்தியன் 2 படத்தில் இருந்து மொத்தம் ஆறு பாடல்கள் இன்று வெளியாகியிருக்கின்றன. இதில் நீலோற்பம் மற்றும் பாரா ஆகிய பாடல்கள் முன்னரே வெளியான நிலையில் வேறு சில பாடல்கள் இன்று வெளியாகியிருக்கின்றன. கதிரல்ஸ், காலண்டர் சாங், கம் பேக் இந்தியன், சகஜக உள்ளிட்டவை அந்த பாடல்களாகும். அனைத்துமே குத்துப் பாடல்கள் போல இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து. 

இந்தியன் தாத்தாவை வைத்து எழுதப்பட்டிருக்கும் பாடலுக்கு அவர் ஆடுவது போலவா இசையமைப்பது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்தியன் தாத்தா இப்ப பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவது போலவும் வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

அனிருத்தின் ஒரு சில ரசிகர்கள், பாடல்கள் அனைத்தும் நன்றாக இருப்பதாகவும் அனிருத் சம்பவம் செய்துள்ளதாகவும் கூறி வருகின்றனர். 

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா:

இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று (ஜூன் 1) நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில், திரையுலக நட்சத்திரங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். இதைத்தொடர்ந்து, இந்தியன் 3 திரைப்படம் குறித்த தகவல்களும் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகின. இந்தின் 3 படத்தின் கதையை பிடித்ததால்தான் இந்தியன் 2 படத்தில் தான் நடித்ததாக கமல்ஹாசன் கூறியிருந்தார். இதனால், இப்படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்! இத்தனை பேரா..

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News