Indian 2 Twitter Review : கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் இந்தியன் 2. 1996ஆம் ஆண்டு உருவாகியிருந்த இந்த படத்தை இயக்கிய ஷங்கர், கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார். இதனாலேயே இப்படத்திற்கு இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியன் 2:


இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் சேனாபதி-சந்துரு என தந்தை-மகன் கதாப்பாத்திரங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார் கமல்ஹாசன். முதல் பாகத்திலேயே மகன் இறந்து விட, தற்போது சேனாபதி கதாப்பாத்திரம்தான் இந்தியன் 2 படத்தில் டிராவல் ஆகிறது. இவருடன் சேர்ந்து சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பல தடங்களுக்கு பிறகு நடைப்பெற்று, ரிலீஸிற்கு தயாராக இருந்த நிலையில் வெளியீட்டு தேதியும் தள்ளிக்கொண்டே போனது. ஒரு வழியாக இப்படம் ஜூலை 12ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தங்களின் விமர்சனத்தை பகிர்ந்து வருகின்றனர். இந்தியன் தாத்தா கதற விட்டது ரசிகர்களையா? வில்லன்களையா? விமர்சனத்தை பார்க்கலாம். 


பிகினி பாட்டு எதுக்கு?


படத்தை பார்த்த ஒரு ரசிகர், நன்றாக போய்க்கொண்டிருக்கும் படத்தில் எதற்கு பிகினி பாடல்? என்று கேள்விக்கேட்டு ட்விட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார். 



பொதுவாக, ஷங்கர் தனது படங்களில் கவர்ச்சி பாடல்களை வைப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


இரண்டாம் பாதி அருமை!


இந்தியன் 2 படம் குறித்து ட்விட்டரில் விமர்சனம் தெரிவித்திருக்கும் ரசிகர், படத்தின் இரண்டாம் பாதி மாஸாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.



மேலும், கமல்ஹாசனின் 6 பேக்கிற்கான ரெஸ்பான்ஸும் ரசிகர்கள் மத்தியில் நன்றாக இருப்பதாக கூறியிருக்கிறார். சண்டை காட்சிகளும் அருமையாக இருக்கிறதாம்.


மேலும் படிக்க | இந்தியன் 2 படத்தில் கமலுக்கு கேமியோ ரோலா? ஷங்கர் பதில்!


கமல்ஹாசனின் நடிப்பு!


கமல்ஹாசனின் நடிப்பிற்கு பல ரசிகர்கள் நல்ல விமர்சனங்களை அளித்திருக்கின்றனர்.



நன்றாக எழுதப்படாத காட்சிகளிலும் கமல் நன்றாக நடித்திருப்பதாக இவர் கூறியிருக்கிறார். க்ளைமேக்ஸ் காட்சி மொக்கையாக இருப்பதாகவும், இந்தியன் 3 படத்தின் க்ளிம்ஸ் காட்சிகள் மாஸாக இருப்பதாகவும் அந்த ரசிகர் கூறியிருக்கிறார்.


சுமாரான முதல் பாதி!


ஒரு ரசிகர், மிகவும் சுமாரான முதல் பாதி என ரிவ்யூவை வெளியிட்டிருக்கிறார்.



இதே போல படம் பார்த்த பலர், முதல் பாதி சுமாராக இருப்பதாகத்தான் விமர்சனத்தை தெரிவித்திருக்கின்றனர்.


மேலும் படிக்க | இந்தியன் 2 ட்ரெய்லர் விமர்சனம்: ஷங்கரின் இந்தியன் தாத்தா பட்டையை கிளப்புவாரா? சொதப்புவாரா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ