1996 ஆம் ஆண்டில் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான 'இந்தியன்' படத்தின் தொடர்ச்சியாக 'இந்தியன் 2' படத்திற்காக கமல்ஹாசனும் ஷங்கரும் கைகோர்த்தனர். 2019 ஆம் ஆண்டில் படப்பிடிப்பைத் தொடங்கிய லைகா புரொடக்ஷன்சுக்கு சோதனை மேல் சோதனையாக வந்துகொண்டிருக்கின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தடைகளின் தொடக்கமாக, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின் தொடக்கத்தில், படப்பிடிப்பு நடந்த செட்டில் கிரேன் விபத்துக்குள்ளான சம்பவத்தில் மூன்று ஊழியர்கள் உயிர் இழந்தனர். இதனால் சில நாட்களுக்கு படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. 


அதன் பிறகு கொரோனா தொற்று (Coronavirus) துவங்கியதால், உலகமே ஸ்தம்பித்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பும் அப்படியே நின்று போனது. 


இப்போது அரசியல் களத்தில் குதித்த காரணத்தால், கமல்ஹாசனும் (Kamal Haasan) பிசியாகி விட்டதால், இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்பது குறித்த ஒரு பெரிய கேள்விக்குறி எழும்பியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது குறித்த தெளிவு ஏற்படாத நிலையில், இயக்குனர் ஷங்கர் புதிதாக இரண்டு படங்களை ஒப்புக்கொண்டுள்ளார். ராம் சரண் நடிக்கும் ‘ஆர்.டி15’ படத்தையும் ரண்வீர் சிங் நடிப்பில் அந்நியன் பட இந்தி ரீமேக்கையும் ஷங்கர் இயக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்தன.  


ALSO READ: இந்தியில் ரீமேக்காகும் அந்நியன்- ஷங்கர் இயக்கத்தில் இவர்தான் ஹீரோ!


இந்த நிலையில், 'இந்தியன் 2' படத்தை முடிக்காமல், இயக்குனர் ஷங்கர் (Shankar) மற்ற படங்களில் பணி புரிய தடை விதிக்க வேண்டும் என்று கோரி லைகா புரொடக்ஷன்ஸ் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை அணுகியது. முந்தைய விசாரணையில் நீதிமன்றம் இந்த மனுவை மறுத்துவிட்டது. இப்போது மீண்டும் போடப்பட்ட ஒரு புதிய மனுவிற்கு பதிலளித்த உயர்நீதிமன்றம், இயக்குனர் ஷங்கர் மற்ற படங்களில் பணிபுரிவதை எதிர்த்து லைகா புரொடெக்‌ஷன்ஸ் மனு தாக்கல் செய்யலாம் என அனுமதி வழங்கியுள்ளது.



ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. லஞ்சம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு சாதாரண மனிதனின் போராட்டத்தை எடுத்துக்காட்டும் படமாக அப்படத்தின் கதைக்களம் இருந்தது. இப்படத்தில் ஷங்கரின் இயக்கமும், கமல்ஹாசனின் நடிப்பும் ரகுமானின் இசையும் வெகுவாக பாராட்டப்பட்டன. சமூக சிந்தனைகள் பலவற்றைப் பற்றி பேசிய இப்படம் பலருக்கு பாடமாகவும் அமைந்தது. படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது படத்தின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.


ALSO READ: பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR