பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

Written by - ZEE Bureau | Last Updated : Apr 13, 2021, 01:39 PM IST
பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நகைச்சுவை பிரபலமாக வலம் வந்தவர் நடிகர் செந்தில். இவரை விரும்பாத ரசிகர்களே இருக்க முடியாது. சினிமாவை போல அரசியலில் மிகந்த ஆர்வம் உடையவர் செந்தில். அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக பல ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் செந்திலுக்கு (Senthil) கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக சென்னையை ஒட்டிய காட்டான்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று (Coronavirus) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நடிகர் செந்திலின் உடல் சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகவும், இதனால் அவர் உடலில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சை முடிந்து இன்னும் சில நாட்களில் நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடு திரும்புவார்கள் என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ALSO READ | தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- தமிழக அரசு!

இதற்கிடையில் கொரோனா இரண்டாம் அலையின் வேகம் அதிகரித்துள்ளது. சுமார் 5 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6,000-ஐ கடந்துள்ளது. ஒரே நாளில் 6,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,33,434 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 12,908 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 2,314 பேர் குணமடைந்தனர்.

இதனால் கொரோனாவை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா இரண்டாம் அலை சினிமா பிரபலங்கள் பலரை மிக வேகமாக தாக்கி வருகிறது. சமீபத்தில் நடிகர் மாதவனும், அவரது குடும்பத்தினரும் இந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | கொரோனா 2வது அலை: அச்சுறுத்தும் தொற்று, அலட்சியம் காட்டினால் அவதியே மிஞ்சும்

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News