தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மாரி’ சீரியல். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாரி, சூர்யா ஸ்விட்சர்லாந்த் கிளம்பிய நிலையில் தாரா அவர்களை கொல்ல ஏற்பாடு செய்திருந்தாள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் சூர்யா மற்றும் மாரி இருவரும் ஏர்போர்ட் கிளம்பி காரில் வந்து கொண்டிருக்கின்றனர், இருவரும் தங்களது காதலையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு வர தாரா ஏற்பாடு செய்த லாரி இவர்களை பின் தொடர்ந்து கொண்டே வருகிறது. 


ஒவ்வொரு முறையும் லாரியிடம் இருந்து தப்பித்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் கார் ரூட் மாறி செல்ல லாரி ஏர்போர்ட் செல்லும் ரூட்டில் சென்று விடுகிறது, உடனே அவர்கள் தாராவுக்கு போன் செய்து ஏர்போர்ட் போற ரூட்ல தான் போவாங்கனு சொன்னீங்க, ஆனா இப்போ வேற ரூட்ல போறாங்க என்று சொல்ல தாரா குழப்பம் அடைகிறாள். 


மேலும் படிக்க | குஷி படத்தில் அதிக சம்பளம் வாங்கியது யார்? விஜய் தேவரகொண்டாவா? சமந்தாவா?


இங்கே சூர்யா மாரியை ரிசார்ட் ஒன்றிற்கு அழைத்து வர மாரி ஏர்போர்ட் போறதா தானே சொன்னீங்க என்று கேள்வி கேட்கிறாள். சூர்யா தேவி அம்மா நமக்கு மகளாக பிறக்க போவதாக சொன்ன விஷயத்தை சொல்கிறான். மேலும் யாரோ நாம சேர கூடாதுனு நினைக்கிறாங்க என்றும் சொல்கிறான். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மாரி​: சீரியலை எங்கு பார்ப்பது?


மாரி சீரியல்  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2வா? வாவ்.. செம அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ