IPL 2021: ஒன்பதாவது IPL அணியை வாங்குகிறாரா நடிகர் மோகன்லால்
அகமதாபாதை தளகாமவும் புதிதாக புனரமைக்கப்பட்ட சர்தார் படேல் ஸ்டேடியத்தை ஹோம் க்ரௌண்டாகவும் கொண்டு ஒரு புதிய அணியை உருவாக்க ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஆர்வம் காட்டி வருவதாக தெரியப்படுகிறது.
IPL 2020 UAE-ல் கோலாகலமாக நடந்து முடிந்தது. மும்பை இந்தியன்சுக்கும் டெல்லி கேபிடல்சுக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் MI வெற்றி பெற்று கோப்பையை மீண்டு கைப்பற்றியது.
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான BCCI, அடுத்த பதிப்பை (IPL 2021) சிறப்பானதாகவும் இன்னும் சுவாரசியமானதாகவும் ஆக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஒரு மெகா ஏலத்தை ஏற்பாடு செய்ய BCCI திட்டமிட்டுள்ளதாக நேற்று செய்தி வந்துள்ளது. போட்டியின் 14 வது பதிப்பில் புதிய அணியும் சேர்க்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ: IPL 2021 update: பெரிய தல ஆகிறாரா சின்ன தல, Raina காட்டில் Rain-னா…
அகமதாபாதை (Ahmedabad) தளகாமவும் புதிதாக புனரமைக்கப்பட்ட சர்தார் படேல் ஸ்டேடியத்தை ஹோம் க்ரௌண்டாகவும் கொண்டு ஒரு புதிய அணியை உருவாக்க ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஆர்வம் காட்டி வருவதாக தெரியப்படுகிறது.
இந்த செய்தி வெளியானவுடன், அந்த நிறுவனத்தின் பெயர்களுக்கான ஊகங்கள் கிளம்பின. ஆனால் பத்திரிகையாளர் ரஜ்னீஷின் ஒரு ட்வீட், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரம் மோகன்லால் (Mohanlal) மற்றும் ஆன்லைன் கல்வி நிறுவனமான BYJU’s ஆகியவை ஒன்பதாவது ஐபிஎல் அணியை வாங்குவதற்கான முயற்சியில் இருக்கக்கூடும் என்பதை சுட்டிக்காட்டியது.
IPL 2020-ன் இறுதிப்போட்டியைக் காண மலையாள நடிகர் மோகன்லால் துபாய்க்கு சென்றார். தென்னிந்திய திரைப்பட நட்சத்திரம் மோகன்லால் போட்டி நேரத்தில் ஸ்டாண்டில் காணப்பட்டார். COVID-19 தொற்று பரவியுள்ள இந்த நிலையில், வலுவான காரணம் இல்லாமல் அவர் அங்கு சென்றிருக்க மாட்டார் என்பதே பலரது ஊகமாக உள்ளது.
ஒன்பதாவது அணி சேர்க்கப்பட்டால், ஒரு மெகா ஆக்ஷன் அதாவது மெகா ஏலம் கண்டிப்பாக நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும். அடுத்த ஏலத்திற்கு நான்கு மாதங்கள் மீதமுள்ள நிலையில், இந்த மெகா ஏலம் உரிமையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். கடந்த முறை நடந்த ஏலத்தில், அணி உரிமையாளர்கள், மூன்று முக்கிய வீரர்களையும், இரண்டு ரைட் டு மேட்ச் (ஆர்.டி.எம்) ஆப்ஷன்களையும் மெகா ஏலத்தில் தக்கவைக்க அனுமதிக்கப்பட்டனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR