‘பாபா’வில் ரஜினிக்கு நேர்ந்தது இன்று சிரஞ்சீவிக்கு! - நஷ்ட ஈடு கொடுக்கத் தயார்?
சிரஞ்சீவி நடிப்பில் அண்மையில் வெளியான ஆச்சார்யா, வசூல் ரீதியாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் படத்துக்கு நஷ்ட ஈடு வழங்க சிரஞ்சீவி முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஆச்சார்யா அண்மையில் வெளியானது .
கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இப்படம் வசூல் ரீதியாக மோசமான ரிசல்ட்டையே பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த பெரிய நடிகர்களின் தெலுங்குப் படங்களிலேயே மிகவும் மோசமான பாக்ஸ் ஆபிஸ் என்றால் அது இதுதான் என்கின்றனர்.
ரசிகர்களின் வருகைக் குறைவால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனராம். பல வினியோகஸ்தர்கள், ஆச்சார்யா படத்துக்கு இழப்பீடு கோரி வருகின்றனர்.
வினியோகஸ்தர் ஒருவர் இது தொடர்பாக நடிகர் சிரஞ்சீவிக்குப் பகிரங்கக் கடிதமே எழுதியுள்ளார். இப்படம் சுமார் 90 கோடி ரூபாய் வரை நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஆச்சார்யா வசூல் தோல்விக்குப் பொறுப்பேற்று, தனது சம்பளத்தில் சுமார் 10 கோடி ரூபாயைத் திருப்பித்தர நடிகர் சிரஞ்சீவி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க | ஹாலிவுட் லெவலில் உருவாகும் ‘KGF-3’? - வில்லனாக நடிக்கப்போவது இந்த நடிகரா?!
அதேபோல இப்படத்தில் நடித்த அவரது மகன் ராம்சரணும் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையைத் திரும்பித் தரவுள்ளதாகக் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் இதுபோன்ற பிரச்சினையைச் சந்தித்தபோது நஷ்ட ஈடு வழங்க முன்வந்தார் ரஜினி. தற்போது சிரஞ்சீவி படத்துக்கும் அதுபோன்ற பிரச்னை ஏற்பட்டு உள்ளது.
மேலும் பட