அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது 169ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். ரஜினிகாந்த் கதை எழுத, நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் கூடுதல் திரைக்கதை எழுதவுள்ளாராம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் படத்துக்கான நடிகர்கள் தேர்வு நடந்துவருகிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா ரிலீஸாக வெளியாகவுள்ளதால் அதற்குத் தகுந்தாற்போல பன்மொழி நடிகர்களும் இதில் இணைய வாய்ப்புள்ளதாம்.


இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டுவந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரஜினியின் இப்படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு பாடல் எழுதவுள்ளாராம்.



நெல்சன் இயக்கிய முதல் படமான கோலமாவு கோகிலாவில்தான் சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். அதில் அவர் எழுதிய 'கல்யாண வயசுதான்' எனும் பாடல் நல்ல ஹிட் அடித்தது. அதன் பின்னர் வெளிவந்த நெல்சனின் படமான டாக்டரில் செல்லம்மா மற்றும் சோ பேபி ஆகிய பாடல்களையும் எழுதியிருந்தார் சிவகார்த்திகேயன்.


நெல்சன் கடைசியாக இயக்கிய விஜய்யின் பீஸ்ட்டில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் இணையத்தில் அடித்த ட்ரெண்டிங் யாருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதை எழுதியதும் சிவகார்த்திகேயன்தான். இப்படியாக நெல்சனுக்கு எழுதும் எல்லாப் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெறுவதால் இந்தப் படத்திலும் அவர் ஒரு பாடல் எழுதவுள்ளாராம். வழக்கம்போலவே ட்ரெண்டியான வார்த்தைகளைப் போட்டு ரஜினிக்கு எழுதவுள்ள சிவகார்த்திகேயன் தனது ஃபேன்பாய் மொமண்டையும் இந்தப் பாட்டில் இறக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.


 


மேலும் படிக்க | மறுவீடு சென்ற நயன்தாரா... கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரல்


 


அதுமட்டுமில்லாமல் அனிருத்- சிவகார்த்திகேயன் காம்போ நன்றாக ஒர்க் அவுட் ஆவதால் இப்பாடலும் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி 169 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரோ இல்லையோ பாடல் எழுதுவது கிட்டத்தட்ட நிச்சயம் எனத் தகவல் வெளிவந்துள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.


மேலும் படிக்க | மாஸ் காட்டும் கமல்ஹாசன்..! விஜய்யின் ‘வசூல்’ இடம் பறிபோகிறதா? ஓர் அலசல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR