99 SONGS திரைப்படத்தை தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மானை தூண்டியது மணிரத்தினமா?
இசையை அடிப்படையாகக் கொண்டு ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்துள்ள திரைப்படம் ஏப்ரல் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இசையை அடிப்படையாகக் கொண்டு ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்துள்ள திரைப்படம் ஏப்ரல் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
வெற்றிகரமான இசை அமைப்பாளராக முன்னேற துடிக்கும் பாடகரின் கலை மற்றும் சுய அறிதல் பற்றிய கதையை கதைக்களமாக கொண்ட திரைப்படம் 99 SONGS.
"99 SONGS” திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். திபெத்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திய நடிகரான புதுமுகம் எஹான் பட், எடில்ஸி வர்கீஸ் மற்றும் டென்சின் தல்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
"99 SONGS” திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும், இணை எழுத்தாளராகவும் அறிமுகமாகிற இசைப்புயல் மேஸ்ட்ரோ ஆர் ஆர் ரஹ்மான், இந்த திரைப்படத்தை தயாரிக்க காரணம் யார் என்பதைப் பற்றி தெரிவித்திருக்கிறார்.
Also Read | கார்த்தியின் சுல்தான் அதிரடி, கலெக்ஷன் கல்லா களை கட்டுகிறது
தனது அபிமான திரைப்படத் தயாரிப்பாளர் மணிரத்னம் தான், ஒரு கதைசொல்லியாக தனது கலைப் பக்கத்தை ஆராயத் தூண்டினார் என்று தெரிவித்தார்.
ஒரு படத்தின் கதையைச் சொல்வது மற்றும் ஒரு பாடலை உருவாக்குவது எப்படி ஒரு பொதுவான செயல்முறையாக இருக்கிறது என்று மணிரத்னம் சொன்ன வார்த்தைகளே தனக்கு திரைப்படத்தை தயாரிக்கும் ஊக்கத்தைக் கொடுத்தது என்று கூறுகிறார்.
Also Read | அஜய் தேவ்கனின் பிறந்த நாள் பரிசாக RRR Motion Poster
"மணி ரத்னம் ஒருமுறை என்னிடம் சொன்னது இன்னமும் நன்றாக நினைவில் இருக்கிறது, ஒரு திரைப்படத்திற்கு பாடலை உருவாக்குவது என்ற கலை உங்களுக்கு தெரியுமல்லவா? அதேபோல் தான் ஒரு திரைப்படத்தை தயாரிப்பதும் என்று சொன்னார். திரைப்படத்தின் ஆணிவேராக பாடல்களையும் இசையையும் கோர்க்கிறீர்கள். அறிமுகம், பாடலின் தீம், ட்யூன் மற்றும் பின்னணி இசை செய்கிறீர்கள். எப்படி ஒரு திரைப்படத்தின்.
இசையமைப்பாளராக திரைப்படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை கூடவே பயணிக்கிறீர்களோ, அதேபோல் தான் திரைப்படத் தயாரிப்பிலும் இருக்கவேண்டும்.அது உங்களுக்கு புதியது அல்ல எனவே நீங்கள் திரைப்படம் தயாரித்தால் அந்தப் பயணம் இறுதியில் அழகாக முடிவடையும் என்று அழகான வார்த்தைகளில் மணிரத்தினம் தெரிவித்தார்"என் இசைப்புயல் ரஹ்மான் தெரிவித்தார்.
ஆஸ்கார் விருது பெற்ற ரஹ்மான், மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான "ரோஜா", "பம்பாய்", "தில் சே", "ஓ காதல் கன்மணி", "குரு" மற்றும் "திருடா திருடா" உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
"99 SONGS” நடிகர்கள் லிசா ரே, மனிஷா கொய்ராலா, ஆதித்யா சீல், இசையமைப்பாளர்-டிரம்மர் ரஞ்சித் பரோட் மற்றும் இந்தியப் பெருங்கடலின் ராகுல் ராம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
ஐடியல் என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து தனது பேனர் ஒய்.எம் மூவிஸ் மூலம் தயாரித்த இப்படத்திற்கான இசையமைப்பாளரும் ரஹ்மான் தான். ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் "99 SONGS” திரைப்படம் ஏப்ரல் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்தார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR