இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம், தொடர்ந்து வசூல் குவித்துவருகிறது. வெளியான முதல் நாளிலிருந்தே தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்கவே நல்ல கலெக்சன் குவித்துவருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை சுமார் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இப்படம், கமலின் ஒட்டுமொத்த கரியரில் அதிக வசூல் செய்த படம் எனும் சாதனையையும் படைத்துள்ளது.


தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை உச்சபட்ச வசூலைத் தொட்ட நடிகர் என்றால் அது ரஜினிதான். அவர் நடித்த 2.O திரைப்படம் சுமார் 500 கோடி ரூபாய் வரை வசூல் குவித்துள்ளது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார்.



பட்டியலில் அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். அட்லி இயக்கத்தில் அவர் நடித்த பிகில் திரைப்படம் சுமார் 300 கோடி ரூபாயை வசூலித்தது. இந்நிலையில், அசைக்க முடியாமல் இருந்துவந்த அந்த 2ஆவது இடத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்துள்ள கமலின் விக்ரம் திரைப்படம் தகர்க்கக்கூடிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. இந்நிலையில் பிகில் மற்றும் விக்ரம் படங்களை வைத்து விஜய்யையும் கமலையும் வசூல் ரீதியாக ஒப்பிட்டு விவாதங்களும் கிளம்பியுள்ளன.


விஜய்யின் இடத்தை வசூல் ரீதியாக கமல் பிடித்துவிட்டார் எனவும் நெட்டிட்சன்கள் கூறிவருகின்றனர்.



விஜய்யைப் பொறுத்தவரை அவரது படங்கள் தொடர்ச்சியாக கோடிக்கணக்கில் வசூல் செய்துவருகின்றன. கடும் விமர்சனங்களைச் சந்தித்த அவரது சில படங்கள்கூட மிக எளிதாக 100 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடுகின்றன. விஜய் படங்களின் மினிமம் கியாரண்டியே 175 கோடி ரூபாயாக உள்ளது. அதேபோல, அவரது கரியரில் அதிக வசூல் செய்த பிகிலை எடுத்துக்கொண்டால் அது விஜய் தனிக் கதாநாயகனாக நடித்து வசூல் குவித்த படம்.


கமல்ஹாசனின் படங்களை எடுத்துக்கொண்டால் கடந்த 20 ஆண்டுகளில் வசூல் ரீதியாக அவரது படங்கள் ஒப்பீட்டளவில் பின் தங்கியே உள்ளன. அதேபோல வசூல் குவிப்பிலும் அவரது படங்கள் நிலையான இடத்தை பிடிக்கவில்லை. அவரது கரியரில் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்ட படங்களாக விக்ரமுக்கு முன் 2 படங்கள் மட்டுமே உள்ளன. தற்போது வந்துள்ள விக்ரம் படமும் கமல்ஹாசன் தனிக் கதாநாயகனாக நடித்து வெளியான படம் அல்ல; மல்ட்டி ஸ்டாரர் படமாகவே விக்ரம் அமைந்துள்ளது.



மேலும் படிக்க | Troll செய்யப்படும் இயக்குநர் நெல்சன்: லோகேஷ் கனகராஜ் சொல்வது என்ன?!


இப்படியாக விஜய்- கமல் படங்களின் வசூல் ஒப்பீட்டில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. விக்ரம் என்கிற ஒரு படத்தை மட்டும் விவாதப் பொருளாக வைத்துக்கொண்டு எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையே தற்போது உள்ளது. கமலுக்கும் விஜய்க்கும் இனிவரும் காலங்களில் வெளியாக உள்ள படங்களின் வசூல் கணக்குகளை வைத்தே இந்த விவகாரத்தில் பதில் தேடமுடியும்!


மேலும் படிக்க | 40 வருஷத்துக்கு முன்னாடியே வந்த கமல்ஹாசனின் Multiverse மூவி!- என்ன படம்னு தெரியுமா?!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR