Anna Serial Update: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்ணா : இன்றைய எபிசோட்


வாரத்தின் ஏழு நாட்களும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டியும் அரக்கன் வேடத்தில் இருக்கும் நான்கு ரவுடிகளும் ரத்னாவை ரவுண்டு கட்டிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது, ரத்னா இவர்களிடம் இருந்து தப்பி ஓடி வர முத்து பாண்டி ரவுடிகளிடம் இன்னிக்கி அவள விடக்கூடாது தாலி கட்டியே ஆகணும் என என சொல்ல ரத்னாவை துரத்தி வர கனி இதைக் கேட்டு விட்டு அண்ணனிடம் சொல்ல ஓட முதலில் அவளை புடிங்கடா என கனியையும் துரத்த அவள் வைகுண்டத்திடம் ஓடி வந்து விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைய ரத்னா அங்கிருந்து தப்பி ஓட திரும்பவும் அவளை துரத்துகின்றனர். 



ரத்னாவை ஒரு கைப்பிடித்து இழுக்க இன்னொரு பக்கம் அம்மன் வேடத்தில் இருக்கும் ஒரு பெண்ணை முத்துப்பாண்டியின் ஆட்கள் கடத்திச் செல்கின்றனர். இங்கே ரத்னாவை பிடித்து இழுத்து காப்பாற்றியது வெங்கடேஷ் தான் என தெரிய வருகிறது.


மேலும் படிக்க | அண்ணா சீரியல்: சண்முகத்தை கொல்ல வந்த மனோஜ்.. ரத்னாவுக்கு வரும் சிக்கல்


ஒரு பக்கம் வெங்கடேஷ் ரத்னா கழுத்தில் தாலி கட்ட முடிவு எடுக்க இன்னொரு பக்கம் சண்முகம் முத்துப்பாண்டி மீது கோபமாக இருக்க வைகுண்டம் அவனை சமாதானம் செய்கிறார். 


பிறகு சௌந்தரபாண்டி ரத்னா இப்போ எங்க பிடியில சிக்கிட்டா, முத்துப்பாண்டி அவளுக்கு தாலி கட்டி தான் கூட்டி வருவான் என்று சொல்ல அப்போ இது யாரு என ரத்னாவை காண்பிக்க சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். இங்க முத்துப்பாண்டி அம்மன் கெட்டப்பில் இருக்கும் பெண்ணுக்கு தாலி கட்ட போக சௌந்தரபாண்டி அதை தடுக்க ஓடி வருகிறார். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | மீண்டும் திருமண வாழ்க்கையில் இணையும் ஐஸ்வர்யா-தனுஷ் ஜோடி..! உண்மை என்ன..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ