அண்ணா சீரியல்: சண்முகத்தை கொல்ல வந்த மனோஜ்.. ரத்னாவுக்கு வரும் சிக்கல்

சண்முகத்தை கொல்ல வந்த மனோஜ்.. ரத்னாவுக்கு வரும் சிக்கல் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 2, 2023, 01:10 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
  • முத்துப்பாண்டி பின்னாடி மேலும் 4 ரவுடிகள் அரக்கன் கெட்டப்பில் வந்து நிற்கின்றனர்.
  • இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அண்ணா சீரியல்: சண்முகத்தை கொல்ல வந்த மனோஜ்.. ரத்னாவுக்கு வரும் சிக்கல் title=

Anna Today's Episode Update: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா' சீரியல்.

அண்ணா : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் சிவன் வேடத்தில் முத்துப்பாண்டி அரக்கன் வேடத்தில் நேருக்கு நேராக சந்தித்து முறைத்துக் கொள்ள இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, முத்துப்பாண்டி பின்னாடி மேலும் 4 ரவுடிகள் அரக்கன் கெட்டப்பில் வந்து நிற்கின்றனர். அதைத்தான் வந்து சண்முகம் சிவன் படத்தில் கூட்டத்திற்கு நடுவே நடனம் ஆடிக்கொண்டிருக்க அதை கேரளாவைச் சேர்ந்த மனோஜூம் அவனது தாத்தாவும் பார்த்து விடுகின்றனர்.

இந்த கூட்டத்திற்கு உள்ளேயே சண்முகத்தை கொலை செய்ய ப்ளான் போடுகின்றனர். மேலும் ரத்னாவை தவிர்த்து மற்ற மூன்று தங்கைகளும் ஆண் கெட்டப்பில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்க அங்கு வரும் சிவபாலன் இசக்கி கே ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்க அவள் யாருடா நீ மிரட்ட இவன் நான் தான் சிவபாலன் என சொல்கிறான். இதைப் பார்த்த சௌந்தரபாண்டி இவன் பொம்பளை கெட்டப் போட்டாலும் அவ பின்னாடி சுத்துறது விடமாட்டான் என புலம்புகிறார். 

அதன் பிறகு ரத்னா அம்மன் வேடத்தில் மடி பிச்சை ஏந்தி பிறகு ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இதை அரக்கன் கெட்டப்பில் இருக்கும் ரவுடிகள் பார்த்து முத்துப்பாண்டிக்கு தகவல் கொடுக்க அவன் ரத்னாவின் கழுத்தில் தாலி கட்ட கிளம்பி வருகிறான். இன்னொரு பக்கம் சண்முகத்தைக் கொண்ட மனோஜ் கூட்டத்துக்குள் கத்தியுடன் நுழைகிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | மீண்டும் திருமண வாழ்க்கையில் இணையும் ஐஸ்வர்யா-தனுஷ் ஜோடி..! உண்மை என்ன..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News