அண்ணா சீரியல் அப்டேட்: சண்முகத்துக்கு பரணி வைத்த 100 நாள் சேலேஞ்.. ஸ்வீட்டுடன் கொண்டாடும் சௌந்தரபாண்டி

Anna Today's Episode Update: சண்முகத்துக்கு பரணி வைத்த 100 நாள் சேலேஞ்.. ஸ்வீட்டுடன் கொண்டாடும் சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட் 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 14, 2023, 01:10 PM IST
  • சவால் விடும் பரணி.
  • பிளான் போடும் வைகுண்டம்.
  • சண்முகத்துக்கு சாப்பாடு போடும் பரணி.
அண்ணா சீரியல் அப்டேட்: சண்முகத்துக்கு பரணி வைத்த 100 நாள் சேலேஞ்.. ஸ்வீட்டுடன் கொண்டாடும் சௌந்தரபாண்டி title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா' சீரியல்.

அண்ணா : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் பரணி நீ என்ன பண்ணாலும் எனக்கு பிடிக்காது என்று சண்முகத்துடன் சொன்ன சண்முகம் ஒரு நாள் கண்டிப்பா என்னை உனக்கு பிடிக்கும் என பதில் கொடுத்த நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சவால் விடும் பரணி

அதாவது பரணி உனக்கு 100 நாள் டைம் கொடுக்கிறேன் அதுக்குள்ள ஒன்னு எனக்கு பிடிக்க வைக்கணும் இல்லன்னா நீ கட்டுன தாலியை நீயே கழட்டிட்டு என்னை எங்க அப்பா வீட்டுல கூட்டிட்டு போய் விடணும் என்று சவால் விட சண்முகமும் முருகன் மேல பாரத்தை போட்டு சவாலை ஏற்றுக் கொள்ள இந்த விஷயம் அறிந்த சௌந்தரபாண்டி எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்து கொண்டாடுகிறார். 

anna serial

அடுத்து பரணி கனியை உட்கார வைத்து கணக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, ரத்னாவை ஸ்கூல் வேலை பார்க்க சொல்லிவிட்டு சமையல் செய்வது பிறகு எல்லோரையும் உட்கார வைத்து பரிமாறுவது என அனைவரையும் கவனித்துக் கொள்கிறார்.

பிளான் போடும் வைகுண்டம்

இதற்கிடையில் வைகுண்டம் புறையேறி இரும்ப பரணி தண்ணீர் எடுத்து வர உள்ளே போக அவர் யாரும் இன்னிக்கு எந்திரிக்க கூடாது, சண்முகத்துக்கு பரணி கையால் சாப்பாடு போட வைக்கணும் என பிளான் போடுகிறார்.  

மேலும் படிக்க | அடேங்கப்பா... கமல் ஹாசன் மகளின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சண்முகத்துக்கு சாப்பாடு போடும் பரணி

அதற்கேற்றார் போல சண்முகம் லேட்டாக வர எல்லோரும் தூங்குவது போல நடிக்க பரணி கதவை திறந்து விடுகிறாள். பிறகு வைகுண்டம் தங்கச்சிங்க எல்லாரும் தூங்கிட்டாங்க நீ அவனுக்கு சாப்பாடு போடுமா என்று சொல்ல இவர்களின் திட்டத்தை புரிந்து கொண்ட பரணி சண்முகத்தை பழிவாங்க உப்பையும் காரத்தையும் கலக்கி சாப்பாடு போடுகிறான். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | மீண்டும் திருமண வாழ்க்கையில் இணையும் ஐஸ்வர்யா-தனுஷ் ஜோடி..! உண்மை என்ன..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News