கமல்ஹாசனின் கரியர் பெஸ்ட்டா விக்ரம்? - உண்மை நிலவரம் என்ன?
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலும் தொடர்ந்து நல்ல வசூல் குவித்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம், தொடர்ந்து வசூல் குவித்துவருகிறது. அத்துடன் சில படங்களின் முந்தைய சாதனைகளையும் இப்படம் தகர்த்துவருகிறது.
பான் இந்தியா ரிலீஸாக ஜூன் 3ஆம் தேதி வெளியான இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 900 தியேட்டர்களில் என உலகம் முழுக்க சுமார் 5000 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. ரிலீஸான முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் ரூ. 25 கோடி வசூல் செய்த இப்படம் இரண்டாம் நாள் இறுதியில் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல் குவித்தது.
இந்நிலையில் இப்படம் முதல் 4 நாட்கள் முடிவில் 175 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். வார இறுதி நாட்கள் எனும் காரணத்தால் இந்த வசூல் சாதனை நிகழ்ந்துள்ளது.
அதே நேரம், பண்டிகை இல்லாத சாதாரண நாளில் வெளியான இப்படம் இவ்வளவு வசூல் குவித்துவருவது சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலும் நல்ல வசூலைக் குவித்துவரும் விக்ரம், இந்தியில் மட்டுமே சற்று பின் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. வெளிநாடுகளைப் பொறுத்தவரை இப்படத்தின் வசூல் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.
மேலும் படிக்க | ‘விக்ரம்’ல ஹிட் அடிச்ச ‘சக்கு சக்கு’ ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டா?!
இன்னும் 2 வாரங்களுக்கு இப்படத்துக்குக் கணிசமான அளவில் கூட்டம் வரும் எனக் கூறப்படுவதால் சுமார் 300 கோடி ரூபாய் வரை இப்படம் வசூலிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு வசூல் பெறும் பட்சத்தில், கமலின் கரியரில் 200 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் எனும் சாதனையை விக்ரம் படைக்கும்!
மேலும் படிக்க | எந்த முறைப்படி நயன்தாராவுடன் திருமணம்?- விக்னேஷ் சிவன் பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR