எந்த முறைப்படி நயன்தாராவுடன் திருமணம்?- விக்னேஷ் சிவன் பதில்!

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கடந்த சில ஆண்டுகளாகவே பழகிவருகிறார் நயன்தாரா. இதையடுத்து இருவருக்கும் எப்போது திருமணம் எனும் கேள்வி பல நாட்களாகவே இருந்துவந்தது. 

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 7, 2022, 12:43 PM IST
  • ஜூன் 9ஆம் தேதி நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்
  • மாமல்லபுரத்தில் திருமணம் நடக்கவுள்ளதாக அறிவிப்பு
  • எந்த முறைப்படி திருமணம் என விக்னேஷ் சிவன் தகவல்
எந்த முறைப்படி நயன்தாராவுடன் திருமணம்?- விக்னேஷ் சிவன் பதில்! title=

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கடந்த சில ஆண்டுகளாகவே பழகிவருகிறார் நயன்தாரா. இதையடுத்து இருவருக்கும் எப்போது திருமணம் எனும் கேள்வி பல நாட்களாகவே இருந்துவந்தது. 

சினிமாவில் பிஸியாக நடித்துவரும் நயன்தாரா அதுகுறித்து உறுதியான எந்தத் தகவலையும் தெரிவிக்காமலேயே இருந்துவந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் பற்றிய பேச்சு திடீரென எழுந்தது. 

இதையடுத்து நடிகை நயன்தாராவின் திருமணம் பற்றிய செய்திதான் கடந்த சில வாரங்களாகவே கோலிவுட்டில் பேசுபொருளாக இருந்துவருகிறது.

அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களைச் சந்தித்து தங்களது திருமண அழைப்பிதழ்களை இருவரும் வழங்கியும் வந்தனர். இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி திருமணம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் திருமணம் பற்றிய தகவல்களையும் பகிர்ந்துள்ளார். 

அந்த வகையில் இவர்களது திருமணம் ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். திருப்பதியில் திருமணத்தை நடத்த முதலில் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் நிறைய பேர் பங்குகொள்ள முடியாது எனும் காரணத்தால் மாமல்லபுரத்தில் நடப்பதாகத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | அஜித் பட சாதனையை முறியடித்த லெஜெண்ட் சரவணன்!- ட்ரெண்டாகும் Ajith vs Legend!

அதேபோல அவர்களது திருமணம் எந்த முறைப்படி நடக்கவுள்ளது எனும் கேள்வி பலருக்கும் இருந்துவந்தது, இந்நிலையில் இதற்கும் தற்போது விடைகிடைத்துள்ளது.அந்த வகையில் இந்தத் திருமணம் இந்து முறைப்படி நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார். திருமணம் முடிந்த கையோடு ஜூன் 11ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமாக நடக்கவுள்ள இவர்களது திருமணத்தில் உயர்மட்ட அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் மற்றும் அண்டை மாநில சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ‘விக்ரம்’ல ஹிட் அடிச்ச ‘சக்கு சக்கு’ ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News