தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி ஒவ்வொரு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் (Bigg Boss Tamil) வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் நிரூப் நந்தகுமார், ஐக்கி (Iykki Berry), தாமரை செல்வி, பிரியங்கா தேஷ்பாண்டே, இம்மான் அண்ணாச்சி மற்றும் பவானி ரெட்டி. ஆகியோர் இருக்கின்றனர். இதில் நேற்றைய எபிசோடில் பிரியங்கா காப்பாற்றப்பட்டார்.


ALSO READ | பிக்பாஸ் ஐந்தாம் சீசனின் போட்டியாளர்களின் புகைப்படத் தொகுப்பு


இதற்கிடையில் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்கிற செய்து வெளியானதில் இருந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியை இனி யார் தொகுத்து வழங்குவார் என்கிற கேள்விதான் எழுந்தது. அதன்படி நேற்றைய எபிசோடில், கமலே மருத்துவமனையில் இருந்து வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் பேசி, தான் வரும் வரை ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறினார். 


நேற்றைய எபிசோடில், கமலே மருத்துவமனையில் இருந்து வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் பேசி, தான் வரும் வரை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறினார். 


இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார், யார் காப்பாற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகி உள்ளது. இதில் குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து ஐக்கி வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பை விட கமல்ஹாசன் மீண்டும் எப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்புதான் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Biggboss 5: பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை நமீதாவின் கண்ணீரும், கலைஞர் கருணாநிதியும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR