Jawan Release: மீண்டும் தள்ளிப்போன ஜவான் படத்தின் ரிலீஸ்..ஜெயிலருக்கு போட்டியாக வருகிறதா?
ஷாருக்கான் நடிப்பில் தயாராகியுள்ள ஜவான் படம், ஆகஸ்டு மாத்தில் உறுதியாக வெளியாகும் என தகவல்கள் பரவி வருகிறது.
பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக் கானை வைத்து அட்லி இயக்கிவரும் படம், ஜவான். இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றது. இந்த படம் ஜூன் மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
ரிலீஸ் தேதியில் மாற்றமா?
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கின்றனர். பாலிவுட்டின் நட்சத்திரங்களான தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கேமியோ ரோலில் தோன்றுகின்றனர். நடிகர் விஜய் கூட, இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளதாக பேச்சு அடிபடுகின்றது. இப்படம், வரும் ஜூன் மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளதாக நேற்று முதல் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் படிக்க | Jailer Update: வெளியானது ஜெயிலர் படத்தின் தெறி வீடியோ! ரிலீஸ் எப்பாேது தெரியுமா?
ஜெயிலருக்கு போட்டியாக ஜவான்..
ஜவான் படம் வரும் ஆகஸ்டு மாதம் 25ஆம் தேதி வெளியாவது உறுதி என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்த முக்கிய அறிவிப்பு, போஸ்டருடன் இன்று படக்குழு தரப்பில் இருந்து அறிவிக்கப்படும் என சில சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரே, ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த படம், வேலைகள் எதுவும் முடியாததால் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸிற்கு தள்ளிப்போடப்பட்டது. ஜெயிலர் படம், ஆகஸ்டு 10ஆம் தேதி வெளியாகும் என, நேற்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதையடுத்து, ஜெயிலருக்கு போட்டியாக ஜவான் படம் வெளியாகுமோ என பேசப்படுகிறது. ஆகஸ்டு மாதத்தில் நிறைய அரசு விடுமுறை நாட்களும் இருக்கின்றன. இதனால்தான் ஜவான் படத்தின் ரிலீஸை தள்ளிப்போட்டுள்ளனரோ என சிலர் கூறி வருகின்றனர்.
ஒரு கைதியின் டைரி கதையா?
1985ஆம் ஆண்டு நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான கைதியின் டைரி கதையை அடிப்படையாக கொண்டு ஜவான் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகின்றன. ஏற்கனவே தமிழில் வெளிவந்த படங்களில் இடம் பெற்றுள்ள கதைகளின் இன்னொரு சாயல்தான் அட்லியின் படங்கள் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாது பாலிவுட் பக்கம் திரும்பிய அட்லிக்கு, ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது பெரும் சறுக்கலாக அமைந்துள்ளதாக சினிமா ரசிகர்கள் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.
ஜவான் குறித்து வெளியாகும் தகவல்கள்:
ஷாருக்கான், சிகிரெட் புகைப்பது போன்ற ஒரு காட்சி உள்பட படத்தின் வேறு சில காட்சிகளும் சில நாட்களுக்கு முன் இணையதளத்தில் பரவியது. சமீபத்தில், ஜவான் படத்தின் டீசர் ரன்னிங் டைம் குறித்த தகவலும் பரவியது. இந்த டீசர், 1.54 நிமிடங்களுக்குள் இருக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது. மேலும், ஜவான் படத்தை சொன்ன நாளுக்குள் ரிலீஸ் செய்ய முடியாததால் ஷாருக்கான் கொஞ்சம் அப்செட்டாகி உள்ளதாகவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.
மேலும் படிக்க | கல்யாணத்தில் காத்திருந்த அதிர்ச்சி - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ