கல்யாணத்தில் காத்திருந்த அதிர்ச்சி - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

Written by - RK Spark | Last Updated : May 4, 2023, 01:01 PM IST
  • திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
  • ரோகித் திருமண ஜோடிகளுக்கு வாழ்த்து என்று சொல்லி விடுகிறான்.
  • இன்றைய எபிசோடில் ரோகித் பூஜாவை பிளாக் மெயில் செய்கிறான்.
கல்யாணத்தில் காத்திருந்த அதிர்ச்சி - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகித் பூஜாவை பிளாக் மெயில் செய்கிறான். இதனால் பூஜாவின் தோழிகள் அனைவரும் அவளை விட்டு விடுமாறு கேட்கிறார்கள். ஆனால் ரோகித் நீயும் நானும் சேர்ந்து இருந்த வீடியோக்களை எல்லோரின் முன்னாலும் போட்டுக்காட்டுவேன் என்று சொல்லி விட்டு செல்கிறான். அடுத்து மண்டபத்தில் உள்ள டிவியில் ரோகித் தோன்றுகிறான் ஒரு முக்கியமான செய்தியை சொல்ல இருக்கிறேன் என்று கூறுகிறான் இதை பார்த்து பூஜா அதிர்ச்சி அடைகிறாள். அனைவரும் ரோகித் என்ன சொல்வானோ என பார்க்க கடைசியில் ரோகித் திருமண ஜோடிகளுக்கு வாழ்த்து என்று சொல்லி விடுகிறான். 

மேலும் படிக்க | தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழ்நாட்டில் தடையா... உளவுத்துறை கொடுத்த அலர்ட் என்ன?

mn

பின் பூஜாவை சந்தித்த ரோகித் என்னிடம் இன்னொரு பெண் டிரைவர் இருக்கிறது இதை போட்டால் நம் விஷயம் எல்லோருக்கும் தெரிந்து விடும் என்று மீண்டும் பூஜாவை பிளாக் மெயில் செய்து விட்டுப் போகிறான்.  இதனால் பூஜா ரோகித்தை கொன்றுவிட திட்டமிட்டு கதவு கைப்பிடியில் கரண்ட் ஒயரை கனெக்சன் கொடுத்துவிட்டு ரோகித்தை அழைத்து வர தன் தோழியை அனுப்ப, ரோகித் வந்து கதவின் கைப்பிடியைப் பிடித்து ஷாக் அடித்து மயங்கி விழுகிறான்.   மதுவை அவன் மீது தெளித்து குடித்து மயங்கி விழுந்தது போல் செட்டப் செய்து கல்யாணம் மண்டபத்தின் ஊழியர்களிடம் சொல்லி ரோகித்தை வேறு ஒரு அறையில் தூக்கி போட சொல்கிறாள். பூஜாவின் அம்மா தாலியை எல்லோரிடமும் ஆசீர்வாதம் செய்ய சக்தியையும் ஆசீர்வாதம் செய்ய சொல்ல சக்தி ஃபீல் ஆகிறாள். 

முகூர்த்த நேரம் நெறுங்க வெற்றி தாலியை எடுத்து கையில் வைத்துக் கொண்டிருக்க சக்தி கட்ட வேண்டாம் என்பது போல் பயத்துடன் நிற்க, ரங்கநாயகி பூஜா கழுத்தில் தாலி கட்டு என்று சொல்ல, வெற்றி கலக்கத்துடன் தாலி கட்டாமல் யோசிக்கிறான்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

mn

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் 2 படத்தில் இளம் வயது குந்தவையாக நடித்தது யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News