ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள ஜவான் பட அப்டேட் ஒன்று இன்று வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிலீஸ் தேதி அறிவிப்பு:


ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போய் விட்டதாக சில நாட்களுக்கு முன்பிருந்து இணையதளங்களில் கருத்துகள் பரிமாறப்பட்டு வந்தன. இந்த நிலையில், ஜவான் படம், வரும் 7ஆம் தேதி வெளியாகும் என இயக்குநர் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 



இப்படம், ஜூன் மாதம் வெளியாகும் என தெறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது உறுதியாகியுள்ளது. 


மேலும் படிக்க | Jawan Release: மீண்டும் தள்ளிப்போன ஜவான் படத்தின் ரிலீஸ்..ஜெயிலருக்கு போட்டியாக வருகிறதா?


தள்ளிப்போன ரிலீஸ்:


கடந்த சில நாட்களாகவே ஜவான் படம் குறித்த செய்திகள் இணையதளங்களின் ட்ரெண்டாகி வந்தது. முதலில், ஜவான் படம் ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சில பணிகள் முழுமை பெறாத காரணத்தால் ஜூன் மாத இறுதியில் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போயுள்ளது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றாத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஜவான் படத்தின் பணிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக நடைப்பெற்று வரும் நிலையில், ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது என்பது மட்டும் இன்னும் யாருக்கும் புரியவில்லை. 


அறிவிப்பை வெளியிட்ட ஷாருக்-அட்லீ:


ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பிற்காக, ரசிகர்கள் பலர் இரண்டு நாட்களாக ட்விட்டரே கதி என்று இருந்தனர். ஆனால், படத்தின் ரிலீஸ் தேதி இன்று வெளியாகவுள்ளது என படக்குழு தரப்பிலிருந்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதையடுத்து, நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் #AskSRK என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு, ஒரு மணி நேரத்திற்கு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.



அந்த பதிவுடன் சேர்த்து, #Jawan#7thSeptember என்ற ஹேஷ்டேக்கையும் அவர் வெளியிட்டிருந்தார். இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளரும் ஷாருக்கானின் மனைவியுமான கௌரி கானும் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ப்ரமோ வீடியோவை பகிர்ந்திருந்தார். 


கடுப்பான ஷாருக்?


ஜவான் படத்தின் வேலைகள் பல நாட்களாக முடிக்கப்படாததால் ஷாருக், அட்லீ மீது கோபத்தில் உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. சமீப காலங்களில், ஜவான் படம் குறித்து கூட ஷாருக் எங்கும் பேசவில்லை. இதனால், ரசிகர்கள் ஷாருக்-அட்லீக்கு இடையே மோதல் ஏற்பட்டிருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளது. 


ஜவான் டீசர் எப்போது?


ஜவான் படத்தின் ரிலீஸ் தேதியை தொடர்ந்து அப்படத்தின் டீசரும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது குறித்து படக்குழு மூச்சு கூட விடாமல் உள்ளது. இதற்கு முன்னர், ஜவான் படத்தின் ஒரு காட்சி வெளியானது. அந்த 5 விநாடி காட்சியில், ஷாருக்கான் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. 


இதுவும் காபியா?


தமிழில் வெளிவந்துள்ள படங்களின் கதைக்கு மறுசாயம் பூசித்தான், அட்லீ புது படங்களை எடுக்கிறார் என்று ஒரு தரப்பினர் அவர் மீது குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். அவர் இதுவரை இயக்கியுள்ள ராஜா ராணி, மெர்சல் ஆகிய படங்கள் இந்த விமர்சனங்களை சந்தித்துள்ளன. இதையடுத்து, ஜவான் படமும் ஒரு கைதியின் டைரி படக்கதை போன்று உருவாக்கப்பட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால், படம் வெளியான பிறகுதான் அது உண்மையா இல்லையா என்பது தெரியும். 


மேலும் படிக்க | அஜித்தின் 'விடாமுயற்சி'...மே இறுதியில் சூட்டிங்..ரிலீஸ் எப்போ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata