இறைவன் படத்தின் ட்ரெய்லர்: ஜெய், பிரியா ஆனந்த் நடித்த வாமணன் படத்தின் மூலம் கடந்த 2009 ஆம் ஆண்டில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் அகமது. இந்த திரைப்படத்திற்கு பிறகு ஜீவா, வினய், சந்தானம், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான என்றென்றும் புன்னகை படத்தை எடுத்தார். மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதன் பின்னர் இயக்குநர் அகமது கடந்த 2016 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஹன்சிகாவை வைத்து மனிதன் படத்தை இயக்கினார், தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள இறைவன் படத்தை இயக்கியுள்ளார். தற்போது இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறைவன் ட்ரெய்லர் இதோ:




 


மறுபுறம் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமான தனி ஒருவன் படத்தில் நடித்த ஜெயம் ரவி, நயன்தாரா ஜோடி தற்போது சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இறைவன் என்கிற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று, அத்துடன் எந்த சத்தமும் இல்லாமல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி முதலில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டதால் ஜெயம் ரவி ரசிகர்கள் சோகமடைந்தனர். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28 ஆம் தேதி இறைவன் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | ரஜினிகாந்த் to லோகேஷ் கனகராஜ்..பட வெற்றிக்காக கார்களை பரிசாக வாங்கிய பிரபலங்கள்..!


இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. மேலும் 'இறைவன்' படம் அகமது பாணியில் மிகவும் வித்தியாசமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.


சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் அருண்மொழி வர்மனாக அசத்திய ஜெயம் ரவி தற்போது கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உடன் இணைந்து சைரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி ஜெயம் ரவி இயக்குநர் அவதாரமும் எடுக்க உள்ளதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜெயம் ரவி ராஜேஷ் இயக்கும் படம், தனி ஒருவன் 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து படங்களிலும் நடித்து வருகிறார்.


நயன்தாரா பற்றி பேசுகையில், தற்போது இவர் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. ஜவான், டெஸ்ட், நயன்தாரா 75 ஆகிய திரைப்படங்களில் இவர் கவனம் செலுத்தி வருகிறார். இதில் ஜவான் படம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில்தற்போது 8 வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ள இந்த ஜோடிக்கு 'இறைவன்' படம் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்களின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஒரு படத்தில் 3 ஜாம்பவான்கள்... ஒட்டுமொத்த திரையுலகிலும் பலத்த எதிர்பார்ப்பு - அப்டேட் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ