பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதிராவ் ஹைதாரி  நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடன மாஸ்டராக பணியாற்றி வருபவர் பிருந்தா. தற்போது இவர் முதல் முறையாக இயக்குனராக அவதாரமெடுத்துள்ளார். இப்படத்திற்கு ஹே சினாமிகா என்று டைட்டில் வைத்துள்ளனர், இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக பிரபல நடிகை காஜல் அகர்வால் நடிக்கின்றார். இவருடன் பிரபல நடிகை அதிதி ராவ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 


படத்தின் பூஜையுடன் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. மணிரத்தினம், சுகாசினி, குஷ்பூ, பாக்யராஜ் ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் இது காமெடி கலந்த காதல் படமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.