பிக்பாஸ் ஜோவிகா எந்த வகுப்பு வரை படித்துள்ளார்..? முழு விவரம்..!
Bigg Boss Jovika Education: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் மக்களின் கவனம் ஈர்த்த போட்டியாளராக மாறி வருகிறார் ஜோவிகா.
பிக்பாஸ் சீசன் 7:
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் கவனம் பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருக்கிறது, பிக்பாஸ். 2017ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில் சினிமா பிரபலங்கள், டிஜிட்டல் முகங்கள் என 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் புதுப்புது ட்விஸ்டுகளுடனும் ரூல்ஸ்களுடனும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது.
கவனம் ஈர்த்த ஜோவிகா:
பிக்பாஸ் போட்டியாளர்களில் சிலர் முதல் நாளிலேயே கவனம் ஈர்க்க ஆரமபித்தினர். இதில் ஒருவர், ஜோவிகா. இவர், இதற்கு முன்னர் நடைப்பெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்தார். ரக்கட் ஆகவும் தனக்கு தோன்றுவதை பேசும் இவரது குணத்தை சிலருக்கு பிடித்தது. ஆனால் பலருக்கு பிடிக்காமல் போனது. தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதாவின் மினி உருவமாக வந்து இறங்கியுள்ளார் அவரது மகள், ஜோவிகா. பிக்பாஸ் இல்லத்திற்குள் இருக்கும் 18 போட்டியாளர்களிலேயே இவர்தான் மிகவும் இளையவர்.
பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்த முதல் நாள் அனைவருக்கும் கேப்டன்ஸியை தக்க வைத்துக்கொள்ளும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதை நன்றாகவே ஜோவிகா கையாண்டதாக ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் எழுந்தது.
ஜோவிகாவின் படிப்பு..
ஜோவிகா வந்த முதல் எபிசோடில் இவர் குறித்த ஏவி காண்பிக்கப்பட்டது. அதில் அவர், தனக்கு படிப்பு வராத காரணத்தால் நடிப்பு துறையில் டிப்ளமாே படித்ததாக கூறியிருந்தார். இதையடுத்து பிக்பாஸ் எபிசோடுகள் தொடங்கியது. அப்போது அனைவரும் அமர்ந்து ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டனர். அப்போது ஜோவிகா தனக்கு படிப்பு வராததால் நடிப்பில் டிப்ளமோ முடித்ததாக குறிப்பிட்டார். இதையடுத்து சக போட்டியாளர்களான யுகேந்திரனும் விசித்ராவும் படிப்பு குறித்து அவருக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்தனர். விசித்ரா, “பெண்கள் கண்டிப்பாக 12ஆம் வகுப்பு வரையிலாவது படித்திருக்க வேண்டும்..” என்று கூறினார். யுகேந்திரன், “கண்டிப்பாக டிகிரி வரையில் படித்திருக்க வேண்டும்” என்று கூறினார். அப்போது ஜோவிகா, “எனக்கு இது குறித்து பேச வேண்டாம்” என்று கூறிவிட்டார். ஆனாலும் ஜோவிகா படிப்பு குறித்த விவாதம் இன்னும் முடிவு பெறவில்லை.
மேலும் படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் ‘அந்த’ பாேட்டியாளர் யார்?
ஜோவிகா எதுவரை படித்துள்ளார்..?
ஜோவிகா தனக்கு 9ஆம் வகுப்பிற்கு மேல் படிப்பு வரவில்லை என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், நடிப்பில் டிப்ளமோ முடித்துள்ளதாகவும் சமையல் கலையில் (culinary) டிகிரி படிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
காரசார விவாதம்..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஜோவிகாவிற்கும் விசித்ராவிற்கும் பரபரப்பாக விவாதம் நடந்தது. விசித்ரா தன்னை 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்று கூறியதை சுட்டிக்காட்டிய ஜோவிகா, “அனைவருக்கும் கல்வி அறிவு முக்கியம்தான். ஆனால் அதனால் யாரும் சிரமப்படவில்லையா?” என்று பேசினார். இதற்கு பிக்பாஸ் ஹவுஸ் மேடஸ் அனைவரும் விசிலடித்து வரவேற்பு அளித்தனர். மேலும் அவர் நீட் குறித்து பேசிய போது அது குறித்து பேச வேண்டாம் என்று சைகை காட்டினார் விசித்ரா. ஜோவிகாவிற்கு தமிழ் எழுத படிக்க தெரியுமா என விசித்ரா அந்த விவாதத்தில் வினவினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் வனிதா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியாேவில் ஜோவிகா ஒரு தமிழ் செய்யுளை படிக்கிறார். இதை ஜோவிகாவின் தந்தைதான் தனக்கு அனுப்பி பாேஸ்ட் செய்ய கூறியதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
நெட்டிசன்களின் கருத்து..
ஜோவிகா படிப்பு குறித்து பேசிய விவகாரம் சமூக வலைதளங்களிலும் தீயாக பரவி வருகிறது. சிலர் இவருக்கு ஆதரவாக பேச, சிலர் அவர் கூறிய கருத்தை ஆமோதித்தாலும் அவர் பேசிய விதத்திறக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விசித்ராவிற்கும் சிலர் ஆதரவு அளித்துள்ளனர். இது குறித்து கமல்ஹாசன் இன்று மற்றும் நாளைய எபிசோடில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஜோவிகா Vs விசித்ரா-படிப்பு முக்கியமா இல்லையா? பிக்பாஸில் அணல் பறந்த வாக்குவாதம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ