தமிழ் திரைப்பட நடிகரான ஜூனியர் பாலையா, வயது மூப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். இந்த செய்தி திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூனியர் பாலையா:


ஜூனியர் பாலையா, நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன். இவரது இயற்பெயர் ரகு. ஆனால், திரை உலகிற்கு வந்த பிறகு இவரை அனைவரும் ஜூனியர் பாலையா என அழைத்தனர். இவர், இதுவரை எண்ணற்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார்.


உயிரிழப்பு:


ஜூனியர் பாலையா, சில மாதங்களாகவே வயது மூப்பு காரணமாக உடல் உபாதைகளால் அவதிப்பட்ட அவர் அவற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தார். மறைத்த ஜூனியர் பாலையாவிற்கு வயது 70. அவரது உடல் அஞ்சலிக்காக வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு உறவினரும் திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


பழம்பெரும் நடிகரின் மகன்..


தமிழ் திரையுலகில் பிரபலமாக இருந்த குணச்சித்திர நடிகர்களுள் ஒருவர், டி.எஸ் பாலையா. இவரது வசன உச்சரிப்புகளுக்கும் நகைச்சுவைக்கும் இன்றளவும் ரசிகர்கள் பலர் உள்ளனர். 1936ஆம் ஆண்டு தொடங்கி 1976ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த நடிகர் இவர். இவருக்கு ஜூனியர் பாலையா மற்றும் சாய் பாபா என இரு மகன்கள் இருந்தனர். ஒரு கட்டத்தில் ஜூனியர் பாலையாவும் நடிக்க வந்தார். ஆனால், அவரது தந்தையின் இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. இவரும் பல படங்களில் துணை கதாப்பாத்திரங்களாக நடித்தார். இருப்பினும் பெரிதாக இவரது முகமே வெளியில் தெரியாமல் போனது. இதையடுத்து பிரபலமான தமிழ் சீரியலாக இருந்த ‘சித்தி’யில் முக்கிய கதாப்பாத்திரமாக வந்தார். அப்படியே இவருக்கு பல பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நல்ல கதாப்பாத்திரங்களில் நடிக்க வாய்பு கிடைத்தது. 


மேலும் படிக்க | Vaibhavi Upadhyay: விபத்தில் உயிரிழந்த தீபிகா படுகோன் பட நடிகை..அதிர்ச்சியில் உறைந்த பாலிவுட் திரையுலகம்..!


பாராட்டை பெற்று தந்த கதாப்பாத்திரங்கள்:


தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் திரையுலகில் இருந்த ஜூனியர் பாலையா, சில ஆண்டுகள் திரைத்துறையை விட்டு விலகினார். குறிப்பிட்ட ஒரு மதத்தில் இணைந்த அவர் அந்த மதம் குறித்த போதனைகள் உள்ளிட்டவற்றை நடத்தும் ஒரு மையத்தினை நடத்தி வந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு இவரை வெளி உலகிற்கு மீண்டும் அற்முகம் செய்த படம், ‘சாட்டை’. இந்த படத்தில் நேர்மையான, சாதுவான பள்ளியின் தலைமை ஆசிரியராக நடித்திருப்பார். இவரது இந்த கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்தது. இதையடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கும்கி’ படத்திலும் ஒரு துணை கதாப்பாத்திரத்தில் வந்திருந்தார். தொடர்ந்து தனி ஒருவன், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, துணை முதல்வர், புலி, ஓம் சாந்தி ஓம், நேர் கொண்ட பார்வை, சங்க தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 


கடைசியாக நடித்த படம்..


ஜூனியர் பாலையா 2021ஆம் ஆண்டு சமுத்திரகனி நடிப்பில் வெளியான ‘சங்க தலைவன்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, அதே ஆண்டில் வெளியான ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்திலும் நடித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவரை சினிமாவில் பார்க்க முடியாமல் போனது. கடந்த சில மாதங்களாக, ஜூனியர் பாலையா உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று நள்ளிரவு 1:30 மணியளவில் ஆழ்வார் திருநகரில் உள்ள அவரது வீட்டில் அவர் மூச்சுத்திணறல் மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அவரது மகன் உறுதிப்படுத்தினார். 


மேலும் படிக்க | பிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் மரணம்! அதுவும் 8 மாத கர்ப்பிணி! சிகிச்சையில் குழந்தை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ