தமிழில் வெற்றிப்படங்களை கொடுத்து தேசிய விருது பெற்று பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் இயக்குனர் வெற்றிமாறன்.  தமிழ் திரையுலகில் பலரும் விரும்பும் ஒரு வெற்றி இயக்குனராக வெற்றிமாறன் இருந்து வருகிறார்.  இவர் தற்போது 'விடுதலை' படத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார், இந்த படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' என்கிற கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது.  சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | நடிகர் விஜய்- தோனி காம்போவில் அடுத்த படம்? -மிரளும் கோலிவுட்!


இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான ஜூனியர் என்டிஆரை வைத்து இயக்குனர் வெற்றிமாறன் புதிய படமொன்றை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, அதுமட்டுமில்லாமல் தற்போது ஜூனியர் என்டிஆர் எந்தவித படப்பிடிப்பிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  சமீபத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ஜூனியர் என்டி ஆரின் உலகளவில் சிறந்த வரவேற்பை பெற்றதுடன், இந்த படமும் வெற்றி படமாக அமைந்திருந்தது.  மேலும் ஜூனியர் என்டிஆர் 'கேஜிஎஃப்' இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் 'என்டிஆர்31' படத்திலும், கொரட்டலா சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.



இந்த இரண்டு படங்களின் பணிகள் நிறைவடைந்ததும் அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' படத்தை இயக்கவிருக்கிறார், அதனை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து படம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.  ஏற்கனவே ஒரு பேட்டியில் விஜய்க்காக ஒரு கதை தயார் செய்யப்போவதாக தெரிவித்து இருந்தார்.


மேலும் படிக்க | என்னது, ரஜினியின் ஜெயிலர் போஸ்டரே காப்பியா?! நெட்டிசன்ஸிடம் சிக்கிய நெல்சன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR