கதிஜாவா? கண்மணியா? காத்துவாக்குல ரெண்டு காதல் ரிவியூ!
விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்த காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இதற்குமுன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது, அதனை தொடர்ந்து இந்த காம்போ மீண்டும் இணைய போகிறது என்ற தகவல் வந்ததிலிருந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. மேலும் இந்த படத்தில் சமந்தா இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் ஏறி இருந்தது. இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள், புகைப்படங்கள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
மேலும் படிக்க | அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கரின் லூட்டி! ஹாஸ்டல் திரைவிமர்சனம்
விஜய் சேதுபதியின் குடும்பத்தில் யாரேனும் பொண்ணு கொடுத்தாலும், எடுத்தாலும் அந்த குடும்பத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடைபெறுகிறது என்று ஊரில் யாரும் பொண்ணு தராமலும் எடுக்காமலும் இருந்து வருகின்றனர். இந்த தடைகளை மீறி விஜய் சேதுபதி அப்பா திருமணம் செய்து கொள்கிறார், ஆனால் விஜய் சேதுபதி பிறந்தவுடன் அவரும் இறந்து விடுகிறார். விஜய் சேதுபதியும் தனக்கு துரதிஷ்டம் அதிகமாக இருக்கிறது என்று தனது அம்மாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த சமயத்தில் ஒரே நேரத்தில் சமந்தா மற்றும் நயன்தாராவை சந்திக்கிறார், மேலும் அவர்களது மீது காதலிலும் விழுகிறார். இதன் பின்பு என்ன ஆனது? இருவரையும் திருமணம் செய்தாரா இல்லையா என்பது தான் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஒன்லைன்.
காதல் கதையம்சம் கொண்ட கதைகளை வித்தியாசமாக கையாள்வதில் பெயர் போனவர் விக்னேஷ் சிவன். அந்த வகையில் இந்தப்படத்திலும் பூந்து விளையாடி உள்ளார். சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி மூன்று பேருக்கும் இடையில் நடக்கும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் சுவாரசியமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. சமந்தாவை முதல் முதலில் சந்திக்கும் காட்சி, நயன்தாராவை முதன் முதலில் சந்திக்கும் காட்சிகள் என ஒவ்வொன்றும் அழகாய் உள்ளது. சமந்தாவும், நயன்தாராவும் அழகிலும் சரி நடிப்பிலும் சரி போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தில் பங்காற்றி உள்ளனர். மாடர்ன் உடையில் சமந்தாவும், சேரியில் நயன்தாராவும் பார்க்க அவ்வளவு அழகாக உள்ளனர். இவர்களுக்கு இடையில் விஜய் சேதுபதி தனது நடிப்பால் இருவரையும் தூக்கி சாப்பிடுகிறார்.
வசனங்கள் தான் இந்த படத்தை நகர்த்தி கொண்டு செல்கிறது என்றே சொல்லலாம், மேலும் காட்சி அமைப்பிலும் விக்னேஷ் சிவன் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதுவும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு இன்னொரு காரணமாக இருந்தது. தனது 25வது படத்தில் அனிருத் தனது மொத்த வித்தையையும் இந்த படத்தை இறக்கியுள்ளார். பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி பூந்து விளையாடி உள்ளார். அனிருத், விக்னேஷ் சிவன், சமந்தா, விஜய் சேதுபதி, நயன்தாரா என்ற வரிசையில் இந்த படத்தை ரசிக்கலாம். இருவரையும் திருமணம் செய்து கொள்வாரா? மாட்டாரா? அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு கடைசிவரை உள்ளது. ஒரே வீட்டில் மூன்று பேரும் செய்யும் லூட்டிகள் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இல்லாத இந்த படத்தை மிகவும் பொறுமையாகவே பார்க்க வேண்டி உள்ளது. ஆனால் எங்கேயும் அவ்வளவாக போரடிக்காமல் நகரும் திரைக்கதை கூடுதல் சிறப்பு. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை காற்றுவாக்கில் நண்பர்களுடன் சென்று ரசிக்கலாம்.
[ Credits: Rajadurai Kannan]
மேலும் படிக்க | கதிர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR