பா.ரஞ்சித் இயக்கியத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கபாலி'யின் டீஸர் வெளியிடப்பட்டது. டீஸர் மே 1ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்படதால் அனைவரும் டீஸர்காக காத்துகொண்டு இருந்தார்கள். காலை 11மணி அளவில் டீஸர் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலே உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கானோர் பார்த்ததால் சமுக வலைதளமே ஒரு சில நிமிடம் ஸ்தம்பத்தி போனது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்மாநிலத்தை சேர்ந்த ஒரு தமிழ்படம் உலகளவில் சாதனை செய்துகொண்டு இருக்கிறது. மேலும் எண்ணற்ற ஹாலிவுட் படங்களின் சாதனைகளை முறியடித்தது மட்டுமல்லாமல் உலகளவில் அதிக விருப்பங்கள் வெற்ற இரண்டாவது படமாக நம்ம "கபாலி" படம் உள்ளது.


ரஜினி ரசிகர்கள் மாவட்டதோறும் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். எந்த ஒரு புரமோஷன் மற்றும் விளம்பரமும் இல்லாமல் உலகளவில் ஒரு தமிழ் படம் சாதனை செய்துகொண்டு இருப்பதால் அனைவரையும் மகிழ்சி மற்றும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.