Kadaisi Ulaga Por vs Lubber Pandhu Twitter Review : தமிழ் சினிமாவில், கடந்த சில நாட்களாக முக்கிய படங்கள் சில ஒரே நாளில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், செப்டம்பர் 20ஆம் தேதியான இன்று ஹிப் ஹாப் ஆதி இயக்கி-நடித்து-தயாரித்திருக்கும் ‘கடைசி உலகப்போர்’ திரைப்படமும், ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் ‘லப்பர் பந்து’ படமும் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் விவரம் குறித்தும், இதில் எது நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லப்பர் பந்து:


தமிழ் சினிமாவில் எப்போதும் விளையாட்டு போட்டிகளை வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் கிரிக்கெட் போட்டியை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்தான், லப்பர் பந்து. இதனை, தமிழரசன் பச்சமுத்து எழுதி-இயக்கி இருக்கிறார். இதில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, பாலா சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 


இதன் டிரைலர் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. பத்திரிக்கையாளர்களுக்கான ஷோ, நேற்று நடைப்பெற்றது. படம் பார்த்த விமர்சகர்கள் பலர், இதற்கு நல்ல விமர்சனங்களையே கொடுத்திருந்தனர். 


கடைசி உலகப்போர்:


சயின்ஸ் ஃபிக்‌ஷன், ஆக்‌ஷன் த்ரில்லர் வடிவில் உருவாகியிருக்கும் படம், கடைசி உலகப்போர். பாடகராக தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகி, நடிகராக வந்து, இயக்குநராக மாறிய இவர், தற்போது தனது ‘கடைசி உலகப்போர்’ படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். இதில் ஹிப்-ஹாப் ஆதியுடன் சேர்ந்து நாசர், நட்ராஜன் நட்டி, ஹரிஷ் உத்தமன், முனிஸ்காந்த், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 


இரண்டிற்கும் வந்துள்ள விமர்சனம்..



படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், முதல் பாதியில் ஹரிஷ் கல்யாண் vs அட்டகத்தி தினேஷிற்கு இடையே சண்டை வரும் காட்சி இடம் பெற்றிருப்பதாகவும், படம் ஸ்போர்ட்ஸ் மற்றும் குடும்ப டிராமாவை வைத்து எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். 



லப்பர் பந்து படத்தில், இசை நன்றாக இருப்பதாக ஷான் ரோல்டனை டேக் செய்து ஒரு ரசிகர் கூறியிருக்கிறார்.



மேலும் படிக்க | ரகு தாத்தா திரை விமர்சனம்! கொஞ்சம் சிரிப்பு..ரொம்ப கடுப்பு..படம் எப்படி?


லப்பர் பந்து திரைப்படம், தமிழ் சினிமாவில் பெரிய ஸ்போர்ட்ஸ் டிராமா படமாக அமையும் என ஒரு ரசிகர் கூறியிருக்கிறார்.



கடைசி உலகப்போர் படத்தை பார்த்த ஒரு ரசிகர், நட்டிதான் படம் முழுவதும் தாங்கி பிடித்திருப்படாகவும், ஹிப்ஹாப் ஆதியின் கேரக்டர் மிகவும் வீக் ஆக எழுதப்பட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.



ஒரு ரசிகர், முதல் 15 நிமிடங்களை மிஸ் செய்தாலும், பார்த்தவரை முதல் பாதி நன்றாக இருப்பதாக கூறியிருக்கிறர். படத்தின் இடைவேளை காட்சி நன்றாக முடிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். 


இரண்டு படங்களில் லப்பர் பந்து படம் நன்றாக இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | GOAT Movie review : விஜய்யின் The GOAT படம் மாஸா? தூசா? விமர்சனம் இதோ!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ