ராம் சரண் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ஆச்சார்யா. இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் காஜல் அகர்வாலும் நடித்திருந்தனர். படம் இந்த மாதம் இறுதியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான புரோமோஷன் பணிகளும் நடைபெற்று வந்தன. இதற்காக, சங்கரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்த ராம் சரண், அவசர அவசரமாக தன்னுடைய போர்ஷனை நடித்துக் கொடுத்துவிட்டு புனேவில் இருந்து ஹைதராபாத் திரும்பினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | குழந்தை நட்சத்திரமாக தளபதி விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


இந்நிலையில், காஜல் அகர்வாலின் காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் முக்கியமில்லாத வகையில் காஜல் அகர்வாலின் காட்சிகள் இருப்பதால் அவர் நடித்திருக்கும் போர்ஷன்கள் நீக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராம் சரண் மற்றும் சிரஞ்சீவியிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆச்சார்யா படத்தில் இருந்து காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து காஜல் அகர்வாலிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.



இதுகுறித்து பேசிய படத்தின் இயக்குநர் கொரடலா சிவா, படம் எடுக்கும்போதே தயக்கத்துடனேயே காஜல் அகர்வாலின் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு முன்பு அவருடைய காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு கொரோனா வந்ததால், அதன்பிறகு சில காட்சிகள் எடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார். கதையின்படி காஜல் அகர்வாலின் காட்சிகள் முக்கியமில்லாத வகையில் இருப்பதாக தோன்றியது. இது குறித்து இயக்குநராக நான் எடுத்த முடிவுக்கு சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் ஆகியோர் ஒப்புக்கொண்டனர் எனத் தெரிவித்துள்ளார்.



இதற்கு முன்பு வெளியான தகவலின்படி, தாய்மை அடைந்திருக்கும் காஜல் அகர்வால், படத்தின் புரோமோஷனுக்காக வர தயாராக இருந்ததாகவும், ஆனால் ராம் சரண் மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. தாய்மை அடைந்திருக்கும் சூழலில் படத்தின் புரோமோஷனுக்காக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என ராம் சரண் காஜல் அகர்வாலிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் காஜல் அகர்வால் காட்சிகள் நீக்கப்பட்டது ரசிகர்களிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது. காஜல் அகர்வாலின் காட்சிகள் நீக்கப்படுவதால், படத்தின் வெளியீடும் திட்டமிட்டப்படி இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 


மேலும் படிக்க | பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடிக்க மறுத்தேன் - ஆண்ட்ரியா பகீர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR