Bhairava Anthem: பிரபாஸின் “கல்கி 2898 கி.பி” படத்தின் முதல் பாடல் வெளியீடு
இந்தியாவின், இந்த ஆண்டின் மிகப் பெரிய படத்தின் எதிர்பார்ப்புமிக்க பாடல் - பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் இணைந்து கலக்கும் “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தின் “பைரவா ஆன்தம்”.
Kalki 2898 AD Movie Update: பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் கல்கி 2898 AD படத்தின் “பைரவா ஆன்தம்” பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
கல்கி 2898 ஏடி திரைப்படம்:
ரசிகர்களால், ‘ரிபள் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்த இவர், அதன் பிறகு தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தொடர்ந்து நடித்து வரும் இவர், கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டிலும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம், கல்கி 2898 ஏடி (Kalki 2898 AD) ஆகும். இந்த படத்தை, தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்குகிறார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் கல்கி 2898 ஏடி படத்தை மிகவும் பிரம்மாண்டமான அளவில் தயாரித்துள்ளது. இந்தப் படம், பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இதில் பிரபாஸ் உடன் தீபிகா படுகோன், கமல் ஹாசன், அமிதாப்பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். மேலும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார்.
ரசிகர்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு:
இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக கமலஹாசன் நடித்துள்ள சூழலில் அவரது கேரக்டர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே கல்கி படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியானது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னுமும் அதிகரித்து உள்ளது.
மேலும் படிக்க | 2024ல் வெளிவர இருக்கும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள்
கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி:
கல்கி 2898 ஏடி திரைப்படம், வரும் ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தின் “பைரவா ஆன்தம்”
இந்நிலையில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில், பெரும் காத்திருப்பிற்கு பிறகு “கல்கி 2898 கி.பி.” படத்திலிருந்து, தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக, “பைரவா ஆன்தம்” பாடலை வெளியிட்டுள்ளனர். உலகளாவிய பிரபலங்களாக திகழும் பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் இணைந்து கலக்கும் இந்தப் பாடல், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், குமாரின் பாடல் வரிகளில், தில்ஜித் டோசன்ஜ் மற்றும் விஜய்நரேன் பாடிய இப்பாடல், படத்தில் பிரபாஸின் பைரவா கதாபாத்திரத்தின் சரியான அறிமுகமாக அமைந்துள்ளது. போனி வர்மாவின் நடன அமைப்பில், தில்ஜித் மற்றும் பிரபாஸின் தனித்துவமான நடன அசைவுகளும், அற்புதமான காட்சியமைப்புகளும் கலந்து ரசிகர்களை மெய்மறக்க செய்கிறது.
மேலும் படிக்க | மகள் திருமணத்திற்கு அர்ஜுன் கொடுத்த வரதட்சனை! ஆத்தாடி..இத்தனை கோடியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ