Kalki 2898 AD New Poster: பிரபாஸின் கதாபாத்திரம் அறிவிப்பு!
Kalki 2898 AD New Poster: மகா சிவராத்திரியை முன்னிட்டு கல்கி படத்தில் பிரபாஸின் கதாபாத்திரத்தின் பெயரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Kalki 2898 AD New Poster: நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி (Kalki 2898 AD) படத்தில் பிரபாஸின் கதாபாத்திர பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிபள் ஸ்டார் பிரபாஸ்:
ரசிகர்களால், ‘ரிபள் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்த இவர், அதன் பிறகு தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய்-அஜித் ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் இவர், கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டிலும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.
தொடர் தாேல்விகள்:
ராஜ மெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருந்த பாகுபலி, பாகுபலி 2 படங்கள் உலக அளவில் பெரிய ஹிட் அடித்தன. தொடர்ந்து இவரை தேடி வந்த படங்கள் அனைத்தும் ஹை பட்ஜெட் படங்களாகவே இருந்தன. ராதே ஷ்யாம், சஹோ உள்ளிட்ட படங்கள் 100 கோடிக்கும் மேற்பட்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படங்கள், பெரும் தோல்வியடைந்தன. இதையடுத்து, ராமாயணத்தை வைத்து எடுக்கப்பட்ட ‘ஆதி புருஷ்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்து தோல்வி பெற்றது. சமீபத்தில் வெளியான வெளியான ‘சலார்’ படம், சுமார் 450 கோடி அளவில் மூன்று பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம், தமிழகத்தை தவிர பிற இடங்களில் ஹிட் அடித்தது. இவர், அடுத்து கல்கி ஏடி 2898 படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க | சினிமாவில் இருந்து விலக காரணம் என்ன? மனம் திறந்த நடிகை மும்தாஜ்..
கல்கி 2898 ஏடி:
பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், கல்கி 2898 ஏடி. இந்த படத்தை, தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்குகிறார். இப்படம், பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இதில் பிரபாஸ் உடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். நடிகர் கமல்ஹாசன், கல்கி 2898 படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த நிலையில், கமல் உள்பட பிற நட்சத்திரங்களுடன் இணைந்து இன்னொரு பெரிய இளம் பாலிவுட் நடிகை இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது.
பிரபாஸின் கதாபாத்திரம் அறிவிப்பு:
இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸின் பெயர் பைரவா எனக் குறிப்பிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளது. பைரவா கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்து வரும் நிலையில் கல்கி எனும் கதாபாத்திரம் கமல்ஹாசன் கதாபாத்திரமா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் தற்போது எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்கி 2898 ஏடி படத்தின் பட்ஜெட்:
தற்போது இந்திய சினிமாவில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பெரிய பட்ஜெட் படங்களாக இருக்கின்றன. அதிலும் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டில் உருவாகும் பல படங்கள், குறைந்தது 300 கோடி வரையிலான பட்ஜெட்டுடன் எடுக்கப்படுகின்றன. கலர்ஃபுள் பாடல்களுடன், காதல், கண்ணாபின்னா காட்சிகளை பார்த்து வந்த பாலிவுட் ரசிகர்களின் ரசனை சமீப காலங்களில் மாறியுள்ளது. தென்னிந்திய இயக்குநர்களையும் இந்தியில் படங்களை எடுக்க உறுதுணையாக இருக்கின்றனர். அந்த வகையில் கல்கி படமும் பெரிய பட்ஜெட்டில் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் எடுக்கப்படுகிறது.
மேலும் படிக்க | D 51 Title: பிச்சைக்காரன் லுக்கில் தனுஷ்! எந்த படத்தில் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ