Kamal Haasan:கமல்ஹாசனுடன் இணைந்து ‘அந்த’ இளம் நடிகை! யார் தெரியுமா?

Kamal Haasan:  நடிகர் கமல்ஹாசனுடன் ஒரு இளம் நடிகை இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யார் அந்த நடிகை என்று தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Feb 8, 2024, 07:20 PM IST
  • கமல் ஹாசன் நடிக்கும் படம் கல்கி.
  • இதில் புதிய நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார்.
  • அந்த நடிகை யார் தெரியுமா?
Kamal Haasan:கமல்ஹாசனுடன் இணைந்து ‘அந்த’ இளம் நடிகை! யார் தெரியுமா?  title=

இந்திய திரையுலகின் அடையாள நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர், கமல்ஹாசன். 69 வயதாகும் கமல், இப்போதும் நடிப்பு, அரசியல், பிக்பாஸ் ஷோ என பிசியாக வலம் வருகிறார். தற்போது, இவருடன் ஒரு இளம் நடிகை ஒரு புது படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. யார் அந்த நடிகை? இவர்கள் இணையும் அந்த படம் என்ன? 

கல்கி 2898 ஏடி:

பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், கல்கி 2898 ஏடி. இந்த படத்தை, தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்குகிறார். இப்படம், பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இதில் பிரபாஸ் உடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். நடிகர் கமல்ஹாசன், கல்கி 2898 படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த நிலையில், கமல் உள்பட பிற நட்சத்திரங்களுடன் இணைந்து இன்னொரு பெரிய இளம் பாலிவுட் நடிகை இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. 

மிருணாள் தாகூர்:

வட இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் தென் தமிழகத்தில் பல கோடி ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த நடிகை மிருணாள் தாகூர். இந்தியில் சில பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள இவர், அதன் பிறகு படங்களிலும் துணை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘Hi Nanna’ படத்தின் கதாநாயகி இவர்தான். இது போன்று ஃபீல் குட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பெற்ற மிருணாள், அடுத்து, இந்திய அளவில் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் கல்கி 2898 ஏடி படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 31 வயதாகும் இவர், முதல்முறையாக கமலுடன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mrunal Thakur

கல்கி 2898 ஏடி படத்தின் பட்ஜெட்:

தற்போது இந்திய சினிமாவில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பெரிய பட்ஜெட் படங்களாக இருக்கின்றன. அதிலும் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டில் உருவாகும் பல படங்கள், குறைந்தது 300 கோடி வரையிலான பட்ஜெட்டுடன் எடுக்கப்படுகின்றன. கலர்ஃபுள் பாடல்களுடன், காதல், கண்ணாபின்னா காட்சிகளை பார்த்து வந்த பாலிவுட் ரசிகர்களின் ரசனை சமீப காலங்களில் மாறியுள்ளது. தென்னிந்திய இயக்குநர்களையும் இந்தியில் படங்களை எடுக்க உறுதுணையாக இருக்கின்றனர். அந்த வகையில் கல்கி படமும் பெரிய பட்ஜெட்டில் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் எடுக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | Lal Salaam: ‘லால் சலாம்’ ரஜினிகாந்தின் சம்பளம்..கேமியோ ரோலில் நடிக்க ‘இத்தனை’ கோடியா?

இப்படம், மொத்தம் 600 கோடி செலவில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதில் இடம் பெற்றுள்ள நட்சத்திரங்கள் அனைவருமே மிகவும் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகர்களாவர். இவர்களுக்கான சம்பளத்தொகை மட்டும் பல கோடிகளை எட்டியுள்ளது. அது மட்டுமன்றி சயின்ஸ் ஃபிக்ஷன் படம் என்பதால் கிராஃபிக்ஸின் செலவும் தாறுமாறாக எகிறியுள்ளது. இதையெல்லாம் சேர்த்துதான் இத்தனை கோடி என கூறப்படுகிறது. அது மட்டுமல்ல, இப்படம் ஒரே நேரத்தில் இரண்டு பாகமாக எடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வரிசையாக படங்களில் கமிட் ஆன கமல்ஹாசன்:

நடிகர் கமல்ஹாசன், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். ‘நாயகன்’ படத்திற்கு பிறகு இவர்கள் இணையும் முதல் படம் இது. இந்த படத்திற்கு முன்னர் ஹெச்.வினோத் இயக்கும் ஒரு படத்தில் இவர் நடிக்க இருந்தார். ஆனால், இப்படம் சில காரணங்களால் ட்ராப் ஆனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் அன்பரிவ் ஸ்டண்ட் இயக்குநர்களின் படம் ஒன்றிலும் நடிக்கிறார். 

மேலும் படிக்க | பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட்.. டாப் நடிகர்களுடன் த்ரிஷா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News