சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவின் அடையாளத்திற்குள் ஒருவராக விளங்குபவர், கமல்ஹாசன். பல சக மனிதர்களை போலவே, நடிகர் கமல்ஹாசனும் பல காதல்களையும், காதல் கதைகளையும் தனது வாழ்வில் கடந்து வந்துள்ளார். அப்படி, அவர் வாழ்வில் கடந்து வந்த ஒரு இதயத்தை நொறுக்கும் வகையிலான ஒரு காதல்கதையை (Kamal Haasan Love Story) இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கமல்ஹாசனும் காதலும்..


தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என்றால், சற்றும் யோசிக்காமல் நாம் அனைவரும் கூறும் பெயர், ‘ஜெமினி கணேசன்’. இவருக்கடுத்து இந்த பட்டத்தை ஒருவருக்கு கொடுக்க வேண்டுமென்றால், அதற்கு உரித்தானவர் கமல்ஹாசனாகத்தான் இருப்பார். சிறு வயதிலேயே சினிமாவில் தோன்றி, சினிமாவையே படித்து, அதை பிறருக்கும் பயிற்று வித்து, இன்று இந்திய சினிமாவை பிற நாடுகளுக்கு அடையாளப்படுத்தும் நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர் கமல்ஹாசன். 


படங்களை, ஹீரோக்களுக்காக இல்லாமல் கதைகளுக்காக ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வந்த காலத்தில், தன் கதாப்பாத்திரத்தை அவர்களின் மனங்களில் பதியும் படியான நடிகராக வலம் வந்தவர், கமல். படங்களில் திறந்த இதயத்துடன் அனைத்தையும் கற்று, ஏற்று நடித்த இவர், தனது தனிப்பட்ட வாழ்விலும் அதே திறந்த இதயத்துடன் வந்த அனைத்து காதல்களையும் ஏற்றுக்கொண்டார். இவரது மனதில் இடம் பிடித்த ஒரு பெண்ணுடன் இவர் கைக்கோர்க்க முடியாமலேயே போனது. அந்த நடிகை பிற்காலத்தில் இவருக்கு தாயாகவும் பின்னர் மாமியாராகவும் நடித்திருந்தார். 


கமல்-ஸ்ரீவித்யாவின் காதல்..


கமல், அப்போதுதான் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த தருணம். இவரைப்போலவே கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர், ஸ்ரீவித்யா (Sridivya and Kamal Haasan). இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி சிறந்த காமெடி நடிகராக விளங்கினார், தாய் எம்.எல்.வசந்த குமாரி இசைக்கலைஞராகவும் சினிமா பாடகியாகவும் விளங்கினார். ஸ்ரீவித்யாவும், கமல்ஹாசனும் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஜோடியாக நடித்தனர். இந்த படத்தில் இவர்கள் காதலிப்பது போல நடிப்பது போலவே தெரியாது. காரணம், இருவருக்குள்ளும் வெளியில் சொல்லாமலேயே காதல் பூக்க ஆரம்பித்தது. இவர்கள் இருவரும் இதற்கு முன்னரே அன்னை வேளாங்கனி எனும் படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். இதையடுத்து, 1976ஆம் ஆண்டு வெளியான ‘உணர்ச்சிகள்’ படத்திலும் ஒன்றாக நடித்திருந்தனர். 



கமல்ஹாசன்-ஸ்ரீவித்யாவின் நடிப்பு காதல் மட்டுமன்றி உண்மையான காதலும் அவர்களை சுற்றி இருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. இவர்களுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், இதற்கு ஸ்ரீவித்யாவின் தாயார் ஒப்புக்கொள்ளவில்லை. இருவரும் சினிமாவிலேயே வெவ்வேறு வழியில் பயணித்ததால், கமல்ஹாசன் மேடை நடன கலைஞரான வாணி கணபதியை 1978ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதைக்கேட்டவுடன் தான் வெறுமேன உணர்ந்ததாக ஸ்ரீவித்யாவே ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். 


மேலும் படிக்க | திருமணம் செய்து கொள்ளும் பிரேம்ஜி! பெண் யார் தெரியுமா?


கமலுக்கு தாயாக ஸ்ரீவித்யா..


கமல்ஹாசனுடன் ஒரு காலத்தில் ஜோடியாக நடித்து வந்த ஸ்ரீவித்யா, பின்னர் அவருக்கு தாயாக ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நடித்திருந்தார் (Srividya Kamal Haasan Movies). அதன் பிறகு, 1998ஆம் ஆண்டு வெளியாகியிருந்த ‘காதலா காதலா’ படத்தில் கமலுக்கு மாமியாராக நடித்திருந்தார். இருவரும், ‘இதற்கு முன்னர் காதலித்தோம்’ என்ற சுவடே தெரியாதது போல அவ்வளவு அழகமாக இரண்டு படங்களிலும் தங்களது நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். 


இப்படி நடித்து கொண்டிருக்கையில், கமல்ஹாசனுக்கு இந்தி நடிகை சரிகாவுடன் திருமணம் நடந்து 2004ஆம் ஆண்டு விவகாரத்தில் முடிந்தது. ஸ்ரீவித்யா, ஜார்ஜ் தாமஸ் என்ற உதவி இயக்குநரை 1976ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தனது கணவருக்காக எதையும் செய்ய தயாராக இருந்த இவர், ஒரு கட்டத்தில் தனது சொத்துக்களையும் இழந்தார். ஜார்ஜ், இவரை அடித்து துன்புருத்தியதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 1980ஆம் ஆண்டே விவாகரத்து நடைப்பெற்றது. இறுதியில், ஸ்ரீவித்யா 2006ஆம் ஆண்டு மெட்டாஸ்டிக் மார்பக புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார் (Srividya Death). 


கமல்-ஸ்ரீவித்யாவின் காதல் கதைகளும், அவர்கள் இருவரும் தங்களது காதல் உறவு குறித்து பேசியுள்ள வீடியோக்களும் இணையத்தில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகின்றன. 


மேலும் படிக்க | ரகுல் ப்ரீத் சிங்கிற்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ