பிக் பாஸ் நிகழ்ச்சி அப்டேட்: நடிகர் கமல்ஹாசன் கடந்த 7 சீசன்களாக பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் திடீரென விலகப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வேகமாகப் பரவி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் சீசன் 7:
ஆங்கிலம், இந்தி என பிற மொழிகளில் வெவ்வேறு பெயர்களுடன் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி, பிக்பாஸ் (Bigg Boss). தமிழில், 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் தொலைக்காட்சிகளில் பெரிய அளவில் டி.ஆர்.பி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிதான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சின்னத்திரை தொடர்களை விட, இந்த நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 1ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இந்த நாள் வரை சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. பெரிய திரை மற்றும் சின்னத்திரையில் தோன்றிய சில முகங்களும், சில டிஜிட்டல் முகங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களாக உள்ளனர்.


நடிகர் கமல்ஹாசன்:
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தான் பிக் பாஸ் ஷோவை கடந்த 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். அதற்காக அவருக்கு வருடா வருடம் பெரிய தொகையில் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. சினிமாவை விட அவர் இந்த ஷோவில் தான் அதிகம் சம்பாதித்து வருகிறார் நடிகர் கமல் ஹாசன். தற்போது ஒளிபரப்பாகி வரும் 7வது சீசனில் நடிகர் கமல் ஹாசன் ஒருதலைப்பட்சமாக இருக்கிறார் என விமர்சனம் எழுந்து வருகிறது. அதன்படி பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது, மாயா கேங்குக்கு ஆதரவாக பேசுவது என கமல் இருப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க | பிஸ்னஸ்.. சொந்தமாக ஓட்டல்கள்.. நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு!


பிக் பாஸ் ஷோவில் இருந்து விலகும் நடிகர் கமல்ஹாசன்:
அந்த வகையில் தற்போது கமல் (Kamal Haasan) பிக் பாஸில் இருந்து கமல் விலக முடிவெடுத்து இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இந்த நிகழ்ச்சியால், தனது அரசியல் வாழ்வு பாதிக்கப்படுமோ என்ற எண்ணம் கமலுக்கு எழுந்துள்ளதாகவும் இந்த சீசனோடு அவர் பிக் பாஸை முடித்துக் கொள்வார் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தகவல் உண்மையா என்பது தெரியவில்லை, இது குறித்து கமல்ஹாசன் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தால் தான் இந்த தகவல் உண்மையா அல்லது பொய்யான செய்தியா என்று தெரிய வரும்.


கமல் இடத்தில் சிம்பு:
எனவே தற்போது நடிகர் கமல்ஹாசன் வெளியில் போனால் நடிகர் சிம்பு தான் இந்த ஷோவை தொகுத்து வழங்குவார் என்று நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறி வருகின்றனர்.


கமல்ஹாசனுக்கு எவ்வளவு சம்பளம்?
இதனிடையே கடந்த 7 சீசனாக தொகுத்து வரும் நடிகர் கமல் ஹாசன் வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, முதல் சீசனில் கமல் ஹாசன் 10 கோடி ரூபாய் வாங்கினார். இரண்டாவது சீசனில் 25 கோடி ரூபாய்யை சம்பளமாக பெற்றார். மூன்றாவது சீசனில் 45 கோடி ரூபாய்யும், நான்காவது சீசனில் 50 கோடி ரூபாயும் சம்பளமாக வாங்கி கொண்டார். தொடர்ந்து ஆறாவது சீசனில் 75 கோடி ரூபாய்யை சம்பளமாக கமல் ஹாசன் பெற்றார். தற்போது நடந்து வரும் 7 ஆவது சீசனுக்கு மொத்தமாக கமல் ஹாசன் 130 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது.


மேலும் படிக்க | த்ரிஷாவிற்கு எதிரான வழக்கு! மன்சூர் அலிகானுக்கே எதிராக திரும்பியுள்ளது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ