ரசிகர்களுக்கு பிடித்த நாயகனாகவும் தமிழ் சினிமாவின் மூத்த நடிகராகவும் வலம் வருபவர், கமல்ஹாசன். கிட்டத்தட்ட 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட இவர், தற்போது பான் இந்தியா படமான ப்ராஜெக்ட் கே-வில் இணைந்துள்ளார்.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ப்ராஜெக்ட் கே படத்தில் கமல்..


இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர்களும் இணையும் படம், ப்ராஜெக்ட் கே. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகிவரும் இந்த படத்தினை தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்குகிறார். இவர் சாவித்ரியின் வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட “நடிகையர் திலகம்” படத்தின் இய்ககுநர். கிட்டத்தட்ட 500 கோடி பொருட்செலவில் உருவாகி வருகிறது ப்ராஜெக்ட் கே திரைப்படம். சையின்ஸ் ஃபிக்ஷன் கதையாக உருவாகிவரும் இப்படம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைக்கும் என கூறப்படுகிறது. இதில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாக முன்னதாக தகவல் வெளியான நிலையில் படக்குழுவினர் “The K Surprise” என்ற பெயரில் கமல்ஹாசன் இப்படத்தில் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளது. 


மேலும் படிக்க | நடிகர் விஜய் மீது போலீஸில் பரபரப்பு புகார்..! சிக்கலில் லியோ திரைப்படம்?


வில்லனாக கமல்..? 


நடிகர் கமல்ஹாசன் காதல் ஹீரோ மட்டுமல்ல வில்லத்தனத்திலும் புகுந்து விளையாடுபவர் என்பது இந்திய திரையுலகிற்கே தெரிந்த விஷயம். இந்த ப்ராஜெக்ட் கே படத்தில் கமல் கொடூர வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 20 நாட்கள் இந்த படத்தில் நடிப்பதற்காக 150 கோடி கமலிற்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவரை ப்ராஜெக்ட் கே படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். 


பல வருடங்களுக்கு பின்பு இணையும் அமிதாப் பச்சன்-கமல்..


கமல், 5 வயதில் இருந்தே திரைத்துறையில் உள்ளார். தனது இளமைக்கால சினிமா வாழ்க்கையில் தமிழ் மொழியில் மட்டுமல்ல இந்தியிலும் சில படங்களில் அவர் நடித்துள்ளனர். அமிதாப் பச்சன்-கமல் ஆகிய இருவரும் இணைந்து கர்பாதார், கெராஃப்தார் போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். கடைசியாக இருவரும் ஹேராம் படத்தில் நடித்தனர். அதன் பிறகு இருவருக்கும் நடிக்க பிராஜெக்ட் கே படத்தில்தான் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.



கமலை வரவேற்ற அமிதாப்..


நடிகர் கமல்ஹாசன் ப்ராஜெக்ட் கே படத்தில் இணைந்துள்ளதை வரவேற்ப்பதாக அமிதாப் பச்சன் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “உங்களுடன் மீண்டும் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் கமல். நாம் ஒன்றாக நடித்த பல வருடங்கள் ஆகிவிட்டது..” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு கமல்ஹாசன் ஒரு ரிப்ளை கொடுத்துள்ளார். 


கமல் ட்வீட்..


கமல்ஹாசன் ப்ராஜெக்ட் கே படத்தில் இணைந்துள்ளது குறித்து அமிதாப் பச்சன் ட்வீட் போட்ட நிலையில் அதற்கு கமல் நன்றி தெரிவித்து ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதில், “50 வருடங்களுக்கு முன்னாள் நான் துணை நடன இயக்குநராக இருந்த போதும் படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியபோதும் அஷ்வின் தத் என்ற தயாரிப்பாளரின் பெயர் மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது” என்று கூறியுள்ளார். தனது அறிவிப்பில் ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்க ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் தன்னுடன் நடிக்கும் தீபிகா, பிரபாஸ் ஆகியோருடன் நடிக்கவும் ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


படக்குழு:


இந்தி நடிகர் அமிதாப் பச்சன், பாகுபலி நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, கமல்ஹாசன் ஆகியோர் ப்ராஜெக்ட் கே படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் புதிய சாதனை..! 23 மணிநேரத்திற்குள் படமாக்கப்பட்ட ‘கலைஞர் நகர்’ திரைப்படம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ