இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் கடந்த 3ஆம் தேதி வெளியானது. விஸ்வரூபம்- 2 படத்துக்குப் பின்னர் கமலுக்கு வெளியாகியுள்ள இப்படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் உலகம் முழுக்க ஒட்டுமொத்தமாக 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் விக்ரம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பான் இந்தியா ரிலீஸாக வெளியாகியுள்ள இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 900 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.


இந்தியில் 1500க்கும் அதிகமான திரையரங்குகளிலும் மலையாளத்தில் 400க்கும் அதிகமான திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம், ரிலீஸான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.



மேலும் படிக்க | விக்ரம்: பாடல் வரிகள் திடீர் நீக்கம்- அரசியல் நெருக்கடி காரணமா?


 


இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் நாள் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் இரண்டே நாளில் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல் குவித்துள்ளதாம். இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் எனும் இலக்கை இப்படம் எட்டிவிடும் எனவும் திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.


விக்ரம் தொடர்ச்சியாக வசூல் மழை பொழிந்துவருவதால், கமல்ஹாசனின் கரியரில் அதிக வசூல் செய்த திரைப்படம் எனும் சாதனையை இப்படம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | கமலின் ‘விக்ரம்’: முதல் நாளே இத்தனை கோடி வசூலா? - # Vikram Box Office Report


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR