லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் உலகம் முழுக்க நேற்று வெளியானது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கடந்த மே 15 ஆம் தேதி நடந்தது. அதற்கு முன்பாக மே 11ஆம் தேதி இப்படத்திலிருந்து முதல் பாடலாக ‘பத்தல பத்தல’ எனும் பாடல் வெளியிடப்பட்டிருந்தது. கமல்ஹாசன் எழுதிப் பாடியுள்ள இப்பாடலின் லிரிக்கல் வீடியோ யூடியூப்பில் தற்போதும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
சாண்டி நடனம் அமைத்துள்ள இப்பாடலில் கமல் குத்தாட்டம் போடுவதுபோலக் காட்சிகள் இருந்ததால் பாடல்மீது எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இது ஒரு புறம் என்றால், அப்பாடலில் இடம்பெற்றிருந்த சில வரிகள் மத்திய அரசைச் சீண்டுவதுபோல இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக ‘ஒன்றியத்தின் தப்பாலே’ எனும் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் சினிமா மட்டுமல்லாது அரசியல் வட்டாரத்திலும் விக்ரம் படம் தொடர்பான இந்த விவகாரம் பேசுபொருளானது.
இந்நிலையில் நேற்று வெளியான தியேட்டரிகல் வெர்சனில் இந்தப் பாடல் கமல்ஹாசனின் ஓப்பனிங் பாடலாக அமைந்திருந்தது. ஆனால் பாடல் முழுமையாக இடம்பெறாமல், பாதியிலேயே கட் ஆனது. குறிப்பாக சர்ச்சைக்குள்ளான வரிகள் இதில் இடம்பெறவில்லை. இதனால் இந்த விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. படத்தின் நீளம் கருதி அவை குறைக்கப்பட்டதா அல்லது அரசியல் ரீதியாக யாரேனும் நெருக்கடி அளித்ததால் அது நீக்கப்பட்டதா என நெட்டின்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR