தமிழ் திரைப்பட நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி, இன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்.எஸ் சிவாஜி:


கமல் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அபூர்வ சகோதரர்கள் படத்தில், “தெய்வமே நீங்க எங்கையோ போய்ட்டீங்க..” என்ற டைலாக் பேசி பிரபலமானவர், ஆர்.எஸ்.சிவாஜி. இவர், 1981ஆம் ஆண்டு வெளியான பன்னீர் புஷ்பங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். கோலிவுட்டின் இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் சகோதரர் இவர். 


கமல் ஹாசனின் படங்களில் தவறாமல் இடம் பெறும் நடிகர்களுள் ஒருவர் இவர். அன்பே சிவம், 1986ஆம் ஆண்டு வெளியான விக்ரம், உண்ணைப்போல் ஒருவன், பம்மல் கே.சம்மந்தம் உள்ளிட்ட பல படங்களில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார். இதனுடன் சேர்த்தி தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கோலிவுட்டின் மூத்த நடிகர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | வெறித்தனமான ரசிகனாக மாறிய விஜய்... அட யாருக்கு தெரியுமா?


உயிரிழப்பு:


ஆர்.எஸ் சிவாஜி இன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருக்கு 66 வயது ஆகிறது. இவர், கடைசியாக ‘கார்கி’ படத்தில் சாய் பல்லவியின் தந்தையாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவின் திறமைமிகு காமெடி குணச்சித்திர நடிகராக வலம் வந்த இவர், இன்று உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


திரையுலகினர்-ரசிகர்கள் இரங்கல்:


ஆர்.எஸ் சிவாஜியின் மறைவிற்கு தமிழ் திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | அப்பாவாக போகிறார் குக் வித் கோமாளி புகழ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ