லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழ் திரைப்பட உலகில் இதுவரை இல்லாத அளவுக்கான கலெக்ஷன் செய்த திரைபடம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இதனால் படத்தை தயாரித்த கமல்ஹாசனும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு லெக்ஸஸ் காரை பரிசளித்திருக்கும் கமல்ஹாசன், சிறப்புத் தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு தான் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்சை பரிசாக கொடுத்து அசத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விக்ரம் படத்திற்கான வசூல் கமலுக்கு மட்டுமின்றி தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோருக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அண்மைக் காலமாக வெளியான பெரிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கான லாபங்களைக் கொடுக்காததால், அவர்களும் மனக்குமுறலில் இருந்தனர். ஆனால், இந்தப் படம் அதற்கெல்லாம் பரிசு கொடுத்தது அமைந்துவிட்டது. விக்ரம் படம் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் இயக்குநர் சீனுராமசாமி, விஜய் சேதுபதி குறித்த சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். 



விஜய் சேதுபதி ஒருகாலத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கமல் படத்தால் கோபமடைந்ததாக தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் மன்மதன் அன்பு படமும், சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான தென்மேற்கு பருவக்காற்று படமும் ஒரே நேரத்தில் ரிலீஸாகியுள்ளது. அப்போது, உதயம் தியேட்டருக்கு பைக்கில் சென்ற சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் தங்களின் படங்களுக்கு ரசிகர்கள் செல்கிறார்களா? என பார்த்துள்ளனர். அதில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு டிக்கெட் எடுத்து சென்றுள்ளனர். பெரும்பாலானவர்கள் கமலின் மன்மதன் அன்பு படத்திற்கு சென்றுள்ளனர். இதனால் அப்போது விஜய் சேதுபதியும், சீனுராமசாமியும் கடுப்பானார்களாம்.  


இதனை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள சீனுராமசாமி, அந்த இடத்தில் இருந்து தன்னுடைய கடின உழைப்பால் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்கும் அளவுக்கு விஜய் சேதுபதி உயர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR