தனது ஆஸ்தான குருவான கமல்ஹாசனை வைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் படம் விக்ரம். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இதுவரை சொல்லப்படாத இரண்டு, மூன்று ஹீரோயின்களும் இப்படத்தில் நடித்து உள்ளனர்.  இப்படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி! மீண்டும் உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்!


விக்ரம் படத்தில் கிலிம்ஸ் தொடங்கி தற்போது வரை வெளிவந்துள்ள ஒவ்வொரு போஸ்டர் வரை லோகேஷ் கனகராஜ் பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார். இப்படம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஏகப்பட்ட தடைகள் வந்தாலும் அனைத்தையும் தாண்டி இப்படம் வெகு சிறப்பாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.  குறிப்பாக கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் மூன்று பேருக்கும் இடையில் நடக்கும் காட்சிகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதியும் இருக்கும் காட்சிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 



சமீபத்தில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது, பிறகு அவர் குணமாகி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.  இருப்பினும் தற்போது திட்டமிட்டபடி விக்ரம் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை நடத்த முடியவில்லை. கமல்ஹாசன் தனது கட்சி பணி, தொலைக்காட்சியில் பிக் பாஸ் மற்றும் படப்பிடிப்பு என மூன்றும் ஒரே சமயத்தில் கவனித்து வருவதால் சரியான நேரம் ஒதுக்க முடியாமல் போனது. இதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தார். 



முன்னதாக விக்ரம் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் படப்பிடிப்பு முடியவே மார்ச் இரண்டாவது வாரம் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிய நிச்சயம் கால தாமதமாகும் என்பதால் படம் ஏப்ரல் மாதம் வெளியாவது  தற்போது சந்தேகத்தில் உள்ளது.  மேலும் ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎஃப் 2 படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்துள்ளது. இன்னும் விஜய்யின் பீஸ்ட் படத்தின் அதிகாரப்பூர்வ தேதி வெளியாக வில்லை, இருப்பினும் அவர்கள் ஏப்ரல் 14ஆம் தேதி வர அதிக வாய்ப்பு உள்ளது. அதே மாதத்தில் 28ஆம் தேதி விக்னேஷ் சிவன் - விஜய் சேதுபதி கூட்டணியில் காத்துவாக்குல 2 காதல் படமும் வெளிவர உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதால் இரண்டு படமும் ஒரே தேதியில் வெளியாவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு. அதனால் விக்ரம் படம் மே மாதத்திற்கு தள்ளி போக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகிய கமல்ஹாசன் - அடுத்த தொகுப்பாளர் யார்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR