திரைக்கதை எழுத்தாளராக புதிய பரிமாணத்தில் விஜய் சேதுபதி!

பிரபல நகைச்சுவை நடிகர் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி வசனம் மற்றும் திரைக்கதை எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 22, 2022, 09:50 AM IST
  • எஸ்.ஏ.சந்த்ரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சரவண சக்தி.
  • விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்திற்கு திரைக்கதை எழுதி இருந்தார்.
திரைக்கதை எழுத்தாளராக புதிய பரிமாணத்தில் விஜய் சேதுபதி! title=

இயக்குனரான சரவண சக்தி தமிழ் படங்களின் மூலம் நகைச்சுவை நடிகராக மக்கள் மத்தியில் அறியப்படுகிறார்.  இதுவரை இவர் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.  எஸ்.ஏ.சந்த்ரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சில படங்களை இயக்கி இருக்கிறார்.  

sakthi

மேலும் படிக்க | புஷ்பா படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: படக்குழு செம்ம ஹாப்பி

இவர் தற்போது பெயரிடப்படாத புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார், இதில் கதாநாயகனாக நடிகர் விமல் மற்றும் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக தமிழகத்தின் முன்னாள் டிஜிபி எஸ்.ஆர்.ஜாங்கிட் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த திரைப்படத்தை MIK புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறார்.  இப்படம் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைக்கும் விதமாக அமைந்து இருப்பதோடு பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் இப்படம் எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது. 

sakthi

இந்நிலையில் இப்படத்திற்கு வசனம் மற்றும் திரைக்கதையை நடிகர் விஜய் சேதுபதி எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்ட நிலையில் விரைவில் படக்குழு படத்தின் அதிகார்பூர்வ தலைப்பையும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட இருக்கிறது.  

sakthi

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'கடைசி விவசாயி' படம் நல்ல வரவேற்பை பெற்றது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'காத்துவக்குல ரெண்டு காதல்' படம் விரைவில் வெளியாகவுள்ளது.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இதற்கு முன்னர் விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்திற்கு திரைக்கதை எழுதி இருந்தார்.

மேலும் படிக்க | விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News