கனா காணும் காலங்கள் அப்டேட்: 2006 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, மறக்க முடியாத நினைவுகளை தந்த தமிழ் தொடர் “கனா காணும் காலங்கள்”. தொலைக்காட்சி உலகில் எண்ணற்ற சாதனைகளை படைத்திட்ட இந்த தொடர், ஒரு தொடருக்கான புது இலக்கணத்தையே படைத்தது. பிரமாண்ட வெற்றி பெற்ற இத்தொடரில் நடித்த நடிகர்கள் பின்னர் திரைத்துறையிலும், தொலைக்காட்சி ஊடக துறையிலும் நுழைந்து, வெவ்வேறு பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திரையில் பல சாதனைகள் படைத்திட்ட கனா காணும் காலங்கள் தொடர் புத்தம் புது பொலிவுடன், புது அத்தியாயங்களுடன், புதிய நட்சத்திர பட்டாளத்துடன் கடந்த ஆண்டு ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. இதில் நடிகர்கள் ராஜேஷ், பரத், நடிகை வி.ஜே.சங்கீதா மேலும் பலர் நடித்து இருந்தனர். அப்போது இந்த வெப் சீரியல் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஒரு சில மாதங்களுக்கு முன்பு இந்த வெப் தொடரின் முதல் சீசன் முடிவடைந்தது என அந்த  நிறுவனம் அறிவித்தனர்.


மேலும் படிக்க | நீண்ட நாட்களுக்கு பிறகு தோனி போட்ட அந்த போஸ்ட்! இணையத்தில் வைரல்!


இந்த நிலையில் தற்போது கனா காணும் காலங்கள் தொடரின் சீசன் 2 ஏப்ரல் 21 முதல் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. அதன்படி கனா காணும் காலங்கள் சீசன் 1 முடிவடைந்த இடத்திலிருந்து இரண்டாவது சீசன் தொடர்கிறது. இந்த புதிய சீசனில் சிறகுகள் மாணவர்களிடமிருந்து காதல், சந்தோஷம், ஏக்கம், என அத்தனை உணர்வுகளையும் ரகிகர்கள் இரண்டு மடங்காகப் பெறுவார்கள். இந்த தகவலை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கனா காணும் காலங்கள்  தொடரின் சீசன் 2 வெளியீட்டுத் தேதியை, ஒரு அழகான புரமோ வீடியோ மூலம் அறிவித்துள்ளது. இதோ அந்த வீடியோ: 



மேலும் படிக்க | லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு..வைரலாகும் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ