கொரோனா தொற்றின் இரண்டாவது அலை (Corona Second Wave) மெல்ல மெல்ல குறைந்துகொண்டு வருகிறது. மிக அதிகமாக இருந்த ஒரு நாள் தொற்றின் அளவு தமிழகத்தில் (Tamil Nadu) தற்போது படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் தொற்றின் அளவு மேலும் குறைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கொரோனாவை எதிர்க்க பொதுமக்களுக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போடப்பட்டு வருகிறது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டால் அதன் பக்கவிளைவுகள் எப்படி இருக்குமோ என்ற பயத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மக்களிடையே இன்னமும் சற்று தயக்கம் இருந்து வருகிறது. 


ALSO READ | முதல்வர் ஸ்டாலினுக்கு மாஸ் நடிகர் வேண்டுகோள்!


இந்த தயக்கத்தை போக்கும் விதத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு துறை பிரபலங்கள் தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தி (Actor Karthi) தனது முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். அந்தப் படத்தை ட்விட்டரில் பகிர்ந்த அவர், இன்று தான் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர்.


 



 


ALSO READ | பரபரப்பு அறிக்கை, ரசிகர்களிடம் கார்த்தி அன்புப் பரிசு வேண்டுகோள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR